29 Oct 2017

புதிய அரசியல்யாப்பை குழப்புவதற்கும் தெற்கிலும், வடக்கிலும் சில சக்திகள் முயற்சிகள்செய்து கொண்டிருக்கின்றார்கள்.

SHARE
60  வருடத்துக்கும் மேலாக நடந்த  அகிம்சை ஆயுதப் போராட்டத்துக்கு ஒரு நிரந்தரமானதும் நீடித்து நிற்கக்கூடியதுமான தீர்வைக்காண்பதற்காக பாரளுமன்றம் அரசியல் சாசனசபையாக மாற்றப்பட்டு புதிய அரசியல்யாப்பை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் இவ்வேளையில்  தெற்கிலும்இவடக்கிலும் சில சக்திகள் அதை குழப்புவதற்கும்புதிய அரசியல்  அமைப்பை வரவிடாமல் செய்ய்வதற்கும் முயற்சிகள்செய்து கொண்டிருக்கின்றார்கள்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்

தேசிய இரளஞர சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் சம்மேளனத்தினால் மதுவற்ற நாடு எனும் தொணிப் பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இளைஞர் விழி மது ஒழிப்பு சமூக நற்பணி வேலைத்திட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் .ரகுராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன். களுவாஞ்சிகுடி பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் இளைஞர் சேவை உத்தியோகஸ்த்தர்கள், இனைஞர் யுவதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மேற்படி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

தெற்கிலே முன்னாள் பாதுகாப்பமைச்சின் செயலாளர்  கோத்தபாய தலைமையில் வெளிச்சம் என்ற அமைப்பை தொடங்கிபிரச் சாரங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கின்றார்கள். அத்தோடு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச  புதிய அரசில் அமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் பாராளுமன்றத்தை குண்டு வைத்து தகர்க்க வேண்டுமென்கின்றார். முன்னாள்  படைத்தளபதி  கமால் குணரட்னபுதிய அரசியல் அமைப்பை ஆதரிப்பவர்கள் துரோகிகள் அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்கின்றார்.

புதிய அரசியல் அமைப்பை ஆதரிக்கும் சிங்களவர்களான இவர்களையே  கொல்ல வேண்டும் என்கின்ற படைத்தளபதி 2009  வைகாசி மாத முள்ளிவாய்க்கால் போர்முனையில்  இவர் என்னசெய்திருப்பார்   எத்தனை தமிழ் உயிர்களின் காவுக்கு பொறுப்பாக இருந்திருப்பார் என்பதை  ஊகித்துக் கொள்ளலாம்.

இவர்களைப் போலவே வடக்கிலும்  தமிழ்மக்களின்  உரிமைக்காக  போராடுகின்றோம்  எனக்கூறும்சிலரும்கூட  உருவாக இருக்கின்ற  புதிய அரசியல்  அமைப்பை எதிர்ப்பதோடுஇ அதை ஆதரிப்பவர்கள்  தமிழ் மக்களின் துரோகிகள் என்கின்றார்கள். தெற்கில்எதிர்ப்பவர்கள் தமிழீழத்தை பிரித்துக்  கொடுப்பதற்கானஅரசியலமைப்பென்கின்றார்கள். வடக்கில் எதிர்ப்பவர்கள் இந்தஅரசியலமைப்பில் தமிழருக்கான தீர்வு  எதுவுமில்லையென்கின்றார்கள்இதில்என்ன வேடிக்கை என்றால் இடைக்கால  அறிக்கைதான் தற்போது எம்முன்னேஇருக்கின்றது . தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட பலர் இடைக்கால அறிக்கைக்கு பின்னூட்டல்கள்  கொடுத்திருக்கின்றார்கள். மாதக்கடைசியில்தான் பாராளுமன்றத்தில்கூட  விவாதம் நடக்கஇருக்கின்றது.பூரணப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் அமைப்பு  வருவதற்குள்நீங்கள் இதை எதிர்க்கின்றீர்கள் என்றால் உங்களுக்கு இந்த நாடு  அமைதியாக இருக்கக்கூடாது,  தமிழ் மக்கள்  நிம்மதியாக  இருக்கக்கூடாது என்றா  நீங்கள் நினைக்கின்றீர்கள்.

இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாத்திக்கலாம், போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கும் முதல் 3 மாவட்டங்களுள் மட்டக்களப்பு மாவட்டமும் உள்ளடங்குவதோடு வறுமையிலும் நமது மாவட்டம் முன்னணியில் திகழ்கின்றது. எனவே இளைஞர்கள் ஒன்றிணைந்து சட்டவிரோத போதைப் பொருள் விற்பனைகளையும்இ நடமாட்டங்களையும் தடுக்கமுடியும். இவ்வாறு செயற்பட்டால் போதைப் பொருள் பாவனைகளையும் குறைக்க முடியும்.

நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 6 மதுபான சாலைகள்தான் இருந்தன படுவான்கரைப் பகுதியில் எந்தவித மதுபான சாலைகளும் இருக்கவில்லை ஆனால் தற்போது  64 இற்கு மேற்பட்ட மதுபான சாலைகள் மாத்திரமல்லாமல் உல்லாச விடுதிகளிலும் மதுபானம் விற்கப்படுகின்றன.
என அவர் மேலும் தெரிவித்தார். 




























SHARE

Author: verified_user

0 Comments: