மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்விஅலுவலகம் ஏற்பாடுசெய்த சிறுவர் விளையாட்டு நிகழ்வு திங்கட்கிழமை (30) பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
பழுகாமம் விபுலானந்தா வித்தியாலய கல்விச் சமூகத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் பட்டிருப்புவலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிதராஜன் மற்றும் வலயபிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆரம்பப் பிரிவுக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் பா.வரதராஜன், போரதீவுப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.திரவியராஜா, ஆரம்பப் பிரிவுவிளையாட்டுக்குப் பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் ஜெ.பிரதாபன் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
விளையாட்டு நிகழ்வில் பட்டிருப்பு கல்விவலய பாடசாலைகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஆரம்பப் பிரிவுகளை சேர்ந்தமுப்பது மாணவர்கள் வீதம் சுமார் எண்ணூறு மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment