12 Oct 2017

சின்னவத்தை கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

SHARE
மட்டக்களப்பு  அம்பாறை எல்லைக்கிராமமான சின்னவத்தை கிராம மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளன்றிய நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நல்லாட்சி அரசாவது இம்மக்களை கவனத்திற் கொண்டு அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாம் தமிழர் பண்பாட்டு கழகத்தினருக்கு செவ்வாய்கிழமை (10) சீருடை வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றுகையில்மட்டக்களப்பு  அம்பாறை எல்லைக்கிராமமான சின்னவத்தை கிராம மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளன்றிய நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இக்கிராமத்தை பட்டிருப்பு தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.மூ.இராசமாணிக்கம்  அவர்களினால் குடியேற்றப்பட்ட மக்கள் வாழும் கிராமம். இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து மேலும் மக்களை குடியேற்ற வேண்டும். இந்த பகுதிகளை அடிக்கடி காட்டுயானைகள் தாக்குகின்றமையால் மக்கள் வாழ்வதற்கு ஏற்றாற் போல் மாற்றியமைக்கும் பட்சத்தில் இன்னும் பல மக்கள் குடியேறி எமது எல்லைப்புற கிராம எல்லைகளை பாதுகாக்க கூடியவாறு இருக்கும்.


இந்த நல்லாட்சி அரசாவது இம்மக்களை கவனத்திற் கொண்டு அபிவிருத்திகளை செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து சின்னவத்தை மக்களிடம் சென்று பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்கி மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த வேண்டும் எனவு தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: