மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் நலிவுற்ற பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் பிரதித் தவிசாளர் தெரிவித்தார். கிழக்கு மாகாண மக்களின் பிரச்சனை சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செவ்வாய்க் கிழமை(10) மட்டக்களப்பிலுள்ள அவரது காரியாலயத்தில
வைத்து இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் … இன்று நாட்டில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி நிலவுகின்றது.சிறுபான்மையின மக்களாகிய தமிழ்மக்கள் மாறி மாறி வரும் அரசாங்கத்தால் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகின்றார்கள்.முப்பது வருடகால யுத்தமானது தோற்கடிக்கப்பட்டாலும் மக்கள் சுமையோடுதான் வாழ்கின்றார்கள். யுத்தத்தினால் உயிர் உடமைகளை இழந்தும்,சொத்துக்களை பறிகொடுத்தும் மக்கள் நாளாந்தம் வாழ்வாதாரத்தை பெறுவதில் கஸ்டப்படுகின்றார்கள்.கடந்த அரசு தமிழ்மக்களை ஏமாற்றியது.இதனால் வடகிழக்கில் உள்ள தமிழ்மக்கள் ஒன்றிணைந்து கடந்த அரசை தோற்கடித்து நாட்டிலே நல்லதொரு அரசாங்கத்தை உருவாக்குவோம் எனும் முனைப்புடன் செயற்பட்டு நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியது.
கடந்த யுத்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர்,உடமைகளை இழந்த தமிழ் சமூகம் மற்ற சமூகத்திற்கு ஏற்படாத இழப்புக்களை பெற்றது.இதனால் பல குடும்பங்கள் பெண்களினால் தலைமை தாங்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றது.பிள்ளைகளை படிப்பிக்க வேண்டும் நோக்கில் பெண்கள் வாழ்வாதாரத்துக்காக கஸ்டப்படுவதை நாங்கள் தினமும் காண்கின்றோம்.
நல்லாட்சி அரசாங்கம் தற்போது சொல்லாட்சியே நடாத்துகின்றது.நல்லாட்சி அரசாங்கம் உதட்டளவில் கருத்துக்களை தெரிவிக்காமல் செயலளவில் செய்து காட்டவேண்டும். சிறுபான்மை மக்கள் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் தீர்வை இதுவரைக்கும் வழங்காமல் இருக்கும் நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கில் சிறுபான்மை மக்களின் அடிப்படை பிரச்சனைக்கு தீர்க்கப்போகின்றார்கள். எமது தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜ தந்திர அரசியல் நடவடிக்கையை முன்னெடுத்து வரும் இந்தவேளை நாட்டில் வாழும் தமிழ்மக்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் சமஸ்டியிலான தீர்வை வழங்கப்பட வேண்டும்.ஐக்கிநாடுகள் சபையானது தமிழ்மக்களுக்கு இந்தநாட்டிலே சகல உரிமைகளுடன் கூடியதுமான அரசியல் சாசனத்தையும்,சட்டவரையறைகளுடனான தீர்வையும் பெற்றுக்கொள்வதில் முனைப்புடன் செயற்பட்டுக்கொண்டிருகின்றது.
நல்லதொரு தீர்வை தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என சம்பந்தன் ஐயா செயற்படுகின்றார்.அவருடைய காலத்தில் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு கிடைத்தால் சாலச்சிறந்ததாகும்.எதிர்வரும் காலங்களில் கிழக்கில் தமிழ் மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தி தமிழ்தேசிய கூட்டமைப்பின் அதிகார வரம்புக்குள் தமிழ் முதலமைச்சரை உருவாக்க வேண்டும்.இதற்கு தமிழர்கள் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும் எனத்தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment