வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான எம்.ரீ. ஜப்பார் அலி (வயது 57) சிகிச்சை பயனின்றி வியாழக்கிழமை அதிகாலை 12.10.2017 மரணமாகியுள்ளார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
மரணமடைந்தவர் சுகாதார முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலமுகா முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸன் அலி மற்றும் தற்போதைய கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் ஆகியோரின் சகோதரராவார்.
புதன்கிழமை 11.10.2017 திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் கார் மற்றும் பஸ் ஆகியவை நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்திருந்தது.
இவ்விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் இருவர் முன்னதாக மூதூர் தள வைத்தியசாலையிலும் காரில் பயணித்த வேளையில் படுகாயமடைந்த இருவரும் கிண்ணியா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு அதில் படுகாயமடைந்த ஜப்பார் அலி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.
கிண்ணியாவிலிருந்து மூதூர் பயணித்த பஸ்சும் நிந்தவூரிலிருந்து வந்து கொண்டிருந்த காரும் மோதியிருந்தன.
இச்சம்பவம்பற்றி கிண்ணியா பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment