அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அறிவுறுத்தல்களுக்கமைவாக வும்,கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க "தேசிய உணவு உற்பத்தி மறுமலர்ச்சி வாரத்தை" முன்னிட்டு பாடசாலை வளாகத்தில் மரநடுகை இன்று(11.10.2017) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
விவசாயபாட ஆசிரியர் கே.தேவராஜன் தலைமையில் நடைபெற்ற மரநடுகை நிகழ்வில் பாடசாலையின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் பிரமஅதிதியாகவும் ,பிரதி அதிபர் இராஜதுரை பாஸ்கர்,விவசாய பாட ஆசிரியை திருமதி வரலெட்சுமி-ரெங்கநாதன் ஆகியோர்கள் மரத்தை நாட்டி வைத்தார்கள்.
இதன்போது பழமரக்கன்றுகளான மா,பலா,வாழை,அண்ணாமின்னா,தோடை,ஐம்புட்டான்,பப்பாசி,கொய்யா,மாதுளை,முந்திரிகை உள்ளிட்ட சுமார் நூறு மரக்கன்றுகள் பாடசாலைகளிலும்,பாடசாலை விடுதி வளாகத்திலும் நாட்டிவைக்கப்பட்டது.
இதன்போது இன்று பாடசாலைகளில் உணவு உற்பத்தி,பாதுகாப்பான உணவு தொடர்பாக ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கும் விவசாயரீதியான முறையில் அதிபர் விமல்ராஜ் அவர்களினால் தெளிவூட்டப்பட்டது.பாடசாலைரீதியாக பழம் மற்றும் ,மரக்கறித்தோட்டங்களை அமைத்தல்,மாணவர் விவசாயக்குழுக்களை அமைத்தல்,உணவு உற்பத்தி தொடபான விவசாய வினாவிடைப் போட்டிகளை நாடாத்துதல் உள்ளிட்ட வேலைகளை பாடசாலைகளில் செய்து எனக்கு அறிக்கையிடுமாறும் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்கள் பாடசாலை அதிபர்களையும்,விவசாய பாட ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார்.
0 Comments:
Post a Comment