இம்மாதம் 5ஆம் திகதி வெளியிடப்பட்ட இவ்வாண்டின் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷஸ்பகுமார அறிவித்துள்ளார்.
மீள் மதிப்பீட்டு வேண்டுகோளுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும்அந்தந்தப் பாடசாலை அதிபர்கள் ஊடாக இலங்கைப் பரீட்கைகள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் நாடெங்கிலுமிருந்தும் 3 இலட்சத்து 35 ஆயிரத்து 585 ஆண் பெண் மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
0 Comments:
Post a Comment