தற்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உட்கட்சிபோர் நடைபெறுகின்றது. கூட்டமைப்பை உடைப்பதற்கு பலர் முயற்சிக்கின்றனர். நேற்றைய பத்திரிகையில் ஒரேபக்கத்தில் முரண்பட்ட கருத்துக்களுடைய செய்திகள் உள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது சர்வதேசம் அங்கீககாரம் வழங்கிய நாமம் ஆகவே அதனை விட்டுக்கொடுக்கவும் முடியாது. இந்த பெயரினை வைத்தவர்கள் தமிழீழ விடுதலைபுலிகள். கூட்டமைப்பிற்குள் தமிழரசுகட்சி ஒரு முக்கியமான கட்சி. இந்தியாவின் தலைவர்களான மன்மோகன்சிங் மற்றும் நரேந்திரமோடி ஆகியோரைசந்தித்தபோது அவர்கள் கூறியது உங்களுக்குள்ளே முரண்பாடு இருக்க கூடாது. ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டுக் கொடுக்க முடியாது. அரசாங்கத்துடன் ஓரளவு சமரசத்துடன்பேசி முடிந்தவற்றை பெற்று அரசியலமைப்பை முற்று பெறவைக்க வேண்டும்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவருமான பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் திலீபனின் 30 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் போரதீவுப்பற்றுப் பிரதேசக் கிளையினால் மட்டக்களப்பு பழுகாமம் துரௌபதையம்மன் ஆலய முன்றில் செவ்வாய் கிழமை (26) மாலை நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதில் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..
கடந்த 60 ஆண்டுகளாக நடைபெறுகின்ற தியாகங்களின் அடிப்படையில் உரிமைகளை வென்றெடுக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். இன்று ஒருவாறு காலங்கள் கனிந்து கொண்டு வருகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டு அரசியலில் ஈடுபடுவது எமது அரசாங்கம் மட்டுமே என்று சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரட்ண அண்மையில் கூறியிருந்தார். இதை கூறுவதில் அவர்களுக்கு ஓர் மகிழ்ச்சி. தமிழ் மக்கள் எதைக்கொடுத்தாலாவது எமது அபிலாஷைகளைத் தீர்த்துக் கொள்வோம் என்ற ரீதியில் தான் தற்பொழுது இருந்து கொண்டிருக்கின்றோம். இன்னும் உயிர்களை இழந்தாலும் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற அங்கலாய்பிலேதான் இருந்து கொண்டிருக்கின்றோம்.
தற்பொழுது அரசியலமைப்பு குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசிலமைப்பின் தாற்பரியம் என்வென்று அறிந்து முற்றுப்பெறாத நிலையிலே தெற்கில் இருந்து இது தமிழீழம் பெறுவதற்கான அறிக்கை என்று சில பேரினவாதிகள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். அதேநேரம் தமிழர் தாயகத்தில் இருந்து இந்த இடைக்கால அறிக்கையானது தமிழர்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ளாத அரசியலமைப்பு என்று புலம்பிக்கொள்கின்றார்கள். இந்த அரசியலமைப்பு இரண்டு பக்கங்களினாலும் தீப்பிடித்து சுக்குநூறாகிவிடுமோ? என்று எதிர்பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
ஒருபக்கத்தில் அதிகாரம் போதாது என்றும் மறுபக்கத்தில் அதிகாரம் கூடுதலாக கொடுத்துவிட்டீர்கள் என்று பலவிதமாக பலரும் பேசுகின்ற ஒருஅரசியலமைப்பு இடைக்கால அறிக்கையாக இது மிளிர்ந்து கொண்டிருக்கின்றது.
நேற்று அரசியலமைப்பை உருவாக்க அடிகோலுகின்ற அஸ்கிரியமற்றும் மல்வத்து பௌத்தபீடங்கள் இது ஏற்றுக்கொள்ள முடியாத அரசியலமைப்பு என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலை என்ன என்பதை மக்களுக்கு எவ்வாறு சொல்லலாம் என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றது. தலைவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் தங்களின் அரசிலமைப்பு தொடர்பான கருத்துக்களை கூற வேண்டும் என்பதற்கான தமிழ் மக்கள் வாழும் எட்டு மாவட்டங்களிலும் கட்சியின் மாவட்ட கிளைகள் பொதுமக்களுக்கு விளக்கி இது தொடர்பான அறிக்கையை தலைமைமைப் பீடத்தித்திற்கு அனுப்ப வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக் கிழமை (24) கல்முனையில் தமிழரசுகட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் சாந்தியும் சமாதானமுமாகவாழ இந்த அதிகாரபரவலாக்கல் போதுமா? இல்லையா? என்று மக்களும் கூற வேண்டுமென்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உட்கட்சிபோர் நடைபெறுகின்றது. கூட்டமைப்பை உடைப்பதற்கு பலர் முயற்சிக்கின்றனர். நேற்றைய பத்திரிகையில் ஒரேபக்கத்தில் முரண்பட்ட கருத்துக்களுடைய செய்திகள் உள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது சர்வதேசம் அங்கீககாரம் வழங்கிய நாமம் ஆகவே அதனை விட்டுக்கொடுக்கவும் முடியாது. இந்த பெயரினை வைத்தவர்கள் தமிழீழ விடுதலைபுலிகள். கூட்டமைப்பிற்குள் தமிழரசுகட்சி ஒரு முக்கியமான கட்சி. இந்தியாவின் தலைவர்களான மன்மோகன்சிங் மற்றும் நரேந்திரமோடி ஆகியோரைசந்தித்தபோது அவர்கள் கூறியது உங்களுக்குள்ளே முரண்பாடு இருக்க கூடாது. ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டுக் கொடுக்க முடியாது. அரசாங்கத்துடன் ஓரளவு சமரசத்துடன்பேசி முடிந்தவற்றை பெற்று அரசியலமைப்பை முற்று பெறவைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment