அங்கு வைத்தியசாலையைத் திறந்து வைத்த அவர் மேலும் தெரிவிக்கையில்@
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கிடையே கட்டி வளர்க்கப்படும் ஐக்கியத்தை ஒரு சில சிங்கள பௌத்த இனவாத நோக்கம் கொண்ட அமைப்பினர் சீர் குலைத்து வருகின்றனர்.
முஸ்லிம் தமிழ் பிரதேசங்களில் இடம்பெறும் பேரினவாதிகளின் அத்துமீறல்களால் ஒட்டுமொத்த இன ஒற்றுமையும் இந்த நல்லாட்சிக் காலத்திலும் சீர்குலைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கிழக்கிலும் மத்திய அரசிலும் நல்லாட்சிக்கு முன்னுதாரணமாகச் செயற்பட்டு அபிவிருத்திகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
கடந்த ஆட்சியில் சில பௌத்த அமைப்புக்கள் சிறுபான்மை விரோதப் போக்கைக் கடைப்பிடித்த நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்ததால் அவ்வாட்சியை சிறுபான்மை மக்கள் விரட்டினார்.
இறக்காமம், மாணிக்கமடுப் பிரதேசத்தில் தமிழ் மக்களின் காணிகளை கொள்வனவு செய்து சிங்கள மக்களே இல்லாத இடத்தில் சிங்கள புத்தர் சிலைகளை அமைப்பதற்கு முஸ்தீபுகள் இடம்பெற்றுள்ளதை நாம் அறிவோம்.
எனினும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையால் அந்த விஷமத்தன முயற்சியை நாம் முறியடித்துள்ளோம்.
இவ்வாறு சிறுபான்மை இன ஐக்கியம் சீர்குலைக்கப்படும்போது நாம் அவதானத்துடன் செயற்படவேண்டும்.
தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைகள் மூலமே சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
மாகாண ரீதியாக சுதேச வைத்தியத்திணைக்களம் இப்பொழுது அதிக வளர்ச்சியடைந்து வருவதையிட்டு நான் அகம் மகிழ்கின்றேன்.
நாட்டு வைத்திய முறைமை கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வருகின்றது.
நான் மாகாண சுகாதார அமைச்சைப் பொறுப்பேற்றபோது சுதேச வைத்தியத் திணைக்களத்திற்கான நிதி போதாமையாக இருந்தது.
அதனைக் கவனத்திற்கொண்டு சில திட்டங்களை வகுத்து நிதிகளைப் பெற்று வைத்தியசாலைகளை மாகாண ரீதியாக சிறப்பான முறையில் செய்து வருகின்றோம்.
அது மாத்திரமன்றி தற்காலிக இடங்களில் உள்ள வைத்தியசாலைகளை இ நிரந்திர கட்டிடங்களுக்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
0 Comments:
Post a Comment