மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேராட்டம் செவ்வாய்க் கிழமை (05) மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.
கடந்த 28.08.2017 அன்று பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று கெடியேற்றத்துடன் ஆரம்பமாகிய 9 ஆம் நாள் செவ்வாய் கிழமை (05) ஆவணித்திங்கள் சதுர்த்தசி திதியும், அவிட்ட நட்சேத்திரமும் கூடிய சுப முகுர்த்த வேளையில் தேர் திருவிழா இடம்பெற்றது.
இவ்வாலயத்தின் இவ்வருடத்திற்கான ஹோற்சவம் புதன் கிழமை (06) இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ அ.கு.லிகிதராசாக் குருக்கள் தலைமையில் கிரியைகள் இடம்பெற்றன. இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து திராவிட சித்திரத்தேரத் தேரோட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். மேலும்இதன்போது குருக்கள் மடம் சிவநெறி மன்றத்தினரின் பஜனை வழிபாடுகளும், மேள, தாள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா என்ற ஓசையுடன் தேரோட்டத் திருவிழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment