சகல அரசாங்கப் பாடசாலைகளினதும் வருட இறுதித் தவணைக் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் புதன்கிழமை 06.09.2017 ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கப் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக மீளத் துவங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதேவேளை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக முழுமையாக பயன்படுத்தப்படும் ஐந்து பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 21ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகளுக்காக திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப்பரீட்சை நிலையங்களாக இயங்கிய பாடசாலைகள் அனைத்தும் புதன்கிழமையும் (06.09.2017), ஏனையவை செப்டெம்பெர் 11 ஆம் திகதியும் மூன்றாம் தவணைக்காக திறக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்;டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment