கிழக்கு மாகாணம் தொடக்கம், மத்திய அரசாங்கம் வரையிலான அமைச்சு பதவிகளை வைத்துக் கொண்டு ஒரு இனம் சார்ந்து மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள் எவளவோ உள்ளது உதாரணமாக கிழக்கு மாகாணத்தினால் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி இன விகிதாசாரப்படி ஒதுக்கப்பட்டுள்ளதா? முடிந்தால் வெளிப்படுத்தி காட்டுங்கள். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அதிகாரம் தமிழரிகளின் கைகளில் இருப்பதாகவும் அதோடு இணைந்து அரசியல் அதிகாரமும் தமிழரின் கைகளுக்கு செல்லுமாயின் இஸ்லாமிய இனத்தவர் தமிழர்களிடம் மண்டியிடவேண்டிய சூழ்நிலை உருவாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்பிலிபாறுக் தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக ஞா.கிருஸ்ணபிள்ளை வெள்ளிக்கிழமை
(17) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார் அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வீகிதாசாரத்தினை அறியாது தனது அரசியல் எண்ணத்தினை நிறைவேற்றிக் கொள்ளவும், தனது இனத்தின் மத்தியில் தன்னை இனவைராக்கிய பற்றாளனாக சித்தரிக்கும் நோக்கோடும், தனது வாய்க்கு வந்தவற்றை, இந்ந நாட்டுக்கும்,
நாட்டு மக்களுக்கும் உதவாததும், நடைமுறைக்கு ஒவ்வாததுமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு வெளிப்படுத்தியமை பொருத்தமற்ற ஒரு செயலாகும்
70 வீதத்திற்கு மேல் தமிழர்களும் 25 வீதமான இஸ்லாமிய இனத்தவர்களும் வாழுகின்ற இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பது எந்த விதத்தில் நியாயம். இனவாதம் பேசுவதாக இருந்தால் எமது மாவட்டத்தினை பொறுத்தளவில் நாங்களே இவ்வாறான கருத்துக்களை நாங்களே முன்வைக்க வேண்டும். கிழக்கு மாகாணம் தொடக்கம், மத்திய அரசாங்கம் வரையிலான அமைச்சு பதவிகளை வைத்துக் கொண்டு ஒரு இனம் சார்ந்து மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள் எவ்ளவோ உள்ளது உதாரணமாக கிழக்கு மாகாணத்தினால் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி இன விகிதாசாரப்படி ஒதுக்கப்பட்டுள்ளதா? முடிந்தால் வெளிப்படுத்தி காட்டுங்கள்.
கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த வன்முறைச் சம்பவங்களின் போது எமது தமிழ்த் தலைவர்கள் குரல் கொடுக்கவில்லையா? நிலத்தொடர்பற்ற வலயங்களை அமைக்கும் போது தடை ஏற்படுத்தினார்களா? தீர்வு திட்டத்தின்போது கரையோர மாவட்டத்தினை கோரும் போது அதனை வழங்குவதாக வாக்குறுதியளிக்கவில்லையா? கிழக்கு மாகாண சபையில் நாங்கள் 11 ஆசனங்களை வைத்திருந்தும் முதலமைச்சர் பதவியினை விட்டுக் கொடுக்கவில்லையா?
எமது தலைவர்கள் சிறுபான்மை இனங்கள் ஒற்றமையோடு வாழவேண்டும் என்ற எண்ணத்தில்தான்.
இவற்றையெல்லாம் மேற் கொண்டுள்ளனர். ஆனால் இதற்கு மாறாக நீங்கள் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி நிரந்தரமாக்குவதற்கு இன்றுவரை முட்டுக்கட்டையாக இருக்கின்றீர்கள்.
நாங்கள் வழங்கிய முதலமைச்சு பதவியினை வைத்துக் கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இனம்சார்ந்த அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றார்.
அதே அதிகாரத்தை வைத்துக் கொண்டு தங்கள் இனம்சார்ந்த அதிகாரிகளை கிழக்கு மாகாணம் சார்ந்த திணைக்களங்களில் முக்கிய பதவிகளுக்கு நியமித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபையூடாக ஒதுக்கப்பட நிதி இனவிகிதாசாரப்படி ஒதுக்கபப்ட்டுள்ளதா? முடிந்தால் நிதியின் தொகையை உடன் பகிரங்கப்படுத்தி காட்டுங்கள். இவை அனைத்திற்கும் தடை ஏற்படுத்திய தமிழ் அதிகாரி யார்?. சிப்பிலிபாறுக் அவர்கள் 133 மில்லியன் ரூபாய் நிதியினை மத்திய அரசிடம் இருந்து பெற்று ஒரு இனத்தின் அபிவிருத்திக்கு மாத்திரம் அனைத்து நிதியையும் பயன்படுத்தவுள்ளார். இதற்கு தடை ஏற்படுத்திய அதிகாரி யார்? இவற்றுக்கெல்லாம் நாங்கள் தடை ஏற்படுத்தாததன் விளைவால் இன்று ரவுவ்ஹக்கிம் அவர்கள் வருகின்ற தேர்தலில் முஸ்லிம் காங்கரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தை கைப்பற்றும் என்று கூறும் அளவிற்கு எங்களது நிலை மாறியுள்ளது. நாங்கள் அன்றும் இன்றும் ஒரே நோக்குடன்தான் செயற்பட்டு வருகின்றோம்.
சிப்பிலிபாறுக் அவர்களுக்கு ஒன்றை மட்டும் நான் கூறவிரும்புகின்றேன். பல்லுக்கு அப்பால் சொல்லுப்போனால் அதனை மீழப்பெற முடியாது நாட்டை ஆள்வதும் நாக்கினால் நாட்டை அழிப்பதும் நாக்கினால் என்பதனை எதிர்காலத்தில் புரிந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை முன்வைக்க வேண்டும். என இதன் போது அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment