வாழ்வாதார உதவிகளை பெறுவது மட்டுமல்லாமல் அவற்றை துஸ்பிரயோகம் செய்யாமல் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பெண்கள் தலைமை தாங்கும் 20குடும்பங்களுக்கு வியாழக் கிழமை (17) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும் போது
தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்….
எமது அமைப்பால் பலவகைப்பட்ட வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளோம். அவற்றை சிலர் துஸ்பிரயோகம் செய்ததை நாம் நேரடியாகவே கண்டுள்ளோம். ஆகவே தான் எங்கேனும் நீங்கள் அல்லது ஏனையவர்கள் இவ்வாறான வாழ்வாதார உதவிகளை பெற்றால் அதனை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment