10008 முகிலிகளைக் கொண்டு இறந்த ஆத்தாக்களின் ஆன்மா ஈடேற்றத்திற்காகவும், உலக நன்மைக்காகவும் வேண்டி மகா யாகம் ஒன்று மட்டக்களப்பு கொக்கட்டிச்சேலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வியாழக்கழமை காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிடைத்தற்கரிய மிகவும் பெறுமதிவாய்ந்த இந்தியாவின் கொல்லிமலைக் காட்டுப் பகுதியிலிருந்து எடுத்துவரப்பட்ட 10008 முகிலிவகைகளைக் கொண்டு இந்த மாயாகம் இடம்பெறுகின்றது. இந்த இதில் இந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள காகபுசுண்ட தர்மலிங்க சுவாமிகள், தலைமையிலான சிவாச்சாரியார் குழுவினர் வருகை தந்து இதனை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த யாகம் வெள்ளிக்கிழமை (18) மாலையுடன் நிறைவு பெறவுள்ளது.
இதன்போது நாண்டின் பல பாகங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட சூறாவெளி, யுத்தம் மற்றும் சுனாமி மற்றும் போன்ற பலவற்றில் ஏற்பட்ட உயிர் சேதங்களின் ஆத்தா சாந்தி வேண்டியும், நாட்டுக்கும் நாட்டு மக்களுக:கும் நன்மை வேண்டியும் இந்த யாகம் இடம்பெறுகின்றது. இந்த வேள்வியில் வரும் புகை பக்தர்களின் உடலிலே பட்டால் அவர்களுடைய நோய் பிணிகள் நீங்கும், இந்த யாகத்தால் நாட்டுக்கு நன்மை உண்டாகும், இலங்கையில் இதுதான் முதன் முறையாக நடாத்தப்படும் மகா யாகம் என கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ.வசோதிலிங்கக் குருக்கள் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment