கடந்த இரு மாதங்களாக ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளருக்கான பதவி வெற்றிடம் இருந்து வந்த நிலையில் புதிய பிரதேச செயலாளர் நிமிக்கப்பட்டுள்ளார்.
வவுணதீவு பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜ்பாபு பதவி உயர்வுடன் புதன்கிழமை 09.08.2017 தொடக்கம் ஏறாவூர் நகர பிரதேச செயலாளராக பொறுப்பேற்கவுள்ளார்.
சுந்தரமூர்த்தி ராஜ்பாபு கடந்த காலங்களில் வாகரை, வாழைச்சேனை, வவுணதீவு ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக கடந்த ஐந்த வருடங்கள் கடைமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வவுணதீவு பிரதேச செயலகத்திலிருந்து மாற்றலாகிச் செல்லும் பிரதேச செயலாளர் ராஜ்பாபுவுக்கு அப்பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை 08.08.2017 பிரியாவிடை வைபவம் இடம்பெற்றது.
சமுர்த்தி பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்வில், வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், கணக்காளர் வீ. வேல்ராஜசேகரம், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ரி. சத்தியசீலன், முகாமைத்துவப் பணிப்பாளர் எம். தமயந்தி மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின்போது பிரதேச செயலாளர் சுந்தரமூர்த்தி ராஜ்பாபுவை வாழ்த்தும் வாழ்த்துரைகள் இடம்பெற்றதுடன், சமுர்த்திப் பிரிவு உத்தியோகத்தர்களால் நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.

0 Comments:
Post a Comment