வடக்கு கிழக்கிலுள்ள சகல அரச திணைக்களங்களிம் ஆளணி மீளாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் அரச உத்தியோகஸ்த்தர்களின் தொகை 14 இலட்சத்து 99 ஆயிரத்து முன்நூற்றி எழுபத்து இரண்டு பேர் உள்ளனர். ஆனால் எமது நாட்டில் விஞ்ஞானத்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை போன்றவற்றில் அதிகளவு முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் ஆளணிகளைக் கோருவதென்பது குறைந்து செல்லவேண்டும். மாறாக அது அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. இதனால் அரசுக்கு நட்டம் ஏற்படக் கூடிய சூழல் ஏற்படுகின்றது.
என நிதியமைச்சின் கீழுள்ள முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் காநிதி.மூ.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் காணப்படும் ஆளணிகளை நிரப்புவது தொடர்பான ஆளணி மீளாய்வுக் கூட்டம் மேற்படி வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகள் குணசிங்கம் சுகுணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
அவுஸ்ரேலியா, பிரித்தானியா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளை நோக்குகின்றபோது அங்குள் சனத்தொகைகளுக்கு ஏற்ப அங்குள்ள அரச உத்தியோகஸ்த்தர்களின் தொகை குறைவாகவுள்ளன. தனியார் கம்பனிகளும், தனியார் முதலீடுகளும் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அதிகமுள்ளன. மாறாக எமது நாட்டில் அரச உத்தியோகஸ்த்தர்களின் தொகை அதிகரித்துக் கொண்டு செல்கின்றன ஏனைய விடையங்கள் குறைந்து கொண்டு செல்கின்றன. இதனை மாற்றுவதற்குரிய செயற்பாடுகளை எவ்.ஆர் சுற்று நிருபம், சுட்டிக்காட்டுகின்றது.
எனவே அரசாங்கத்தினுள் உள்ளீர்ப்புச் செய்யும் அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு சரியன முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு சேவைகள் வழங்கப்படுகின்றபோது அதன் வினைத்திறன் அதிகளவு மக்களுக்குக் கிடைக்கும். இதனால் எமது நாடும் முன்னேற்றமடையும் என அவர் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தற்போது 5 வைத்திய நிபுணர்கள் உள்ளனர் இதனை 15 ஆக அதிகரிக்க வேண்டும், சாதாரண வைத்தியர்கள் 27 பேர் உள்ளனர் இதனை 33 ஆக உயர்த்த வேண்டும், தாதிய உத்தியோகஸ்தர்கள் 43 பேர் தற்போது உள்ளனர் இதனை 118 ஆக உயர்த்த வேண்டும் எனவும் மொத்தத்தில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தற்போது, 208 உத்தியோகஸ்தர்கள் கடமை புரிந்து கொண்டிருக்கின்றார்கள் இதனை 450 ஆக உயர்த்த வேண்டும் என இதன்போது முன் வைக்கப்பட்டதாக இதன்போது கலந்து கொண்ட வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment