மட்டக்களப்பு கல்லடியில் ஞாயிற்றுக்கிழமை 06.08.2017 ஐக்கிய தேசியக் கட்சிக் காரியாலயத்தைத் திறந்து வைத்த பின்னர் அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்@
வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலுக்குள் நுழைந்தேன்.
யுத்தத்திற்குப் பின்னர் இப்பகுதி மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்புக்கிடைத்துள்ளது.
மஹிந்தவின் காலத்தில் யுத்தத்திற்குப் பிறகு சாதாரண மக்களுக்கு எதிரான அரசியலே நடந்து கொண்டிருந்தது.
அந்த அரசியலை முறியடித்து மக்களுக்கு ஜனநாயகத்துடனான அரசியலை நாடுபூராகவும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே நான் புதிய அரசியல் கட்சியைத் துவங்கினேன்.
ஜனநாயகக் கட்சியை ஆரம்பித்து மக்களை ஒன்று சேர்த்தோம்.
பெரிய கட்சிகளுடன் போட்டி போட்டு புதிய அரசியல் கட்சிகள் வெல்வது அவ்வளவு சுலபமானதல்ல.
அதனால், மஹிந்தவின் மக்கள் விரோத அரசியலை முறியடிப்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்க்க வேண்டி வந்தது.
இப்பொழுது நாட்டின் இரு பெரிய கட்சிகளும் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரின் கூட்டுத் தலைமையில் ஒன்றிணைந்து ஒரு அரசை நிறுவியுள்ளோம்.
அப்படிப்பட்ட ஒரு அரசின் ஊடாகத்தான் இந்த நாட்டு மக்களுக்கு சுதந்திரமான அரசியலை முன்னெடுக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்திருக்கிறது.
மஹிந்தவின் ஆட்சியில் வடக்கு கிழக்கு மட்டுமல்ல நாட்டின் நாலாபுறங்களும் தமிழ் முஸ்லிம் சிங்களம் என்ற அனைத்து இன மக்களும் ஜனநாயக விரோத பயப்பீதியுடனேயே காலங்கழிக்க வேண்டியிருந்தது.
இப்பொழுது அவ்வாறானதொரு அச்சந்தரும் ஜனநாயக மறுப்பு சூழ்நிலையிலிருந்து நீங்கி எல்லோரும் இணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளோம்.
பெரும்பான்மையினருக்கான சகல உரிமைகளும் வசதி வாய்ப்புக்களும் நாட்டின் சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் உடன்பாடு கண்டதாகவே தற்போதைய அரசு கோலோச்சுகிறது.
இதற்குப் பின்னர் இந்த நாட்டில் இன மத பேதம் உருவாக வாய்ப்பளிக்க முடியாது.
நாட்டின் அனைத்து மதத்தினருக்கும் அந்தஸ்து உண்டு.
இரண்டாயிரம் வருட கால இலங்கை வரலாற்றில் நாம் இணைந்து வாழ்ந்து வந்துள்ளோம்.
மீண்டும் அத்தகைய ஒரு நிலைமைக்குஇலங்கையர் என்ற உன்னத ஒரு இனம் என்ற சமுதாயத்தை உருவாக்க நாம் உழைக்க வேண்டியுள்ளது.
சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலாயர், பறங்கியர் ஆகியோருக்கு அவர்களுக்கே உரித்தான சிறப்பான கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் உள்ளன. நாம் அவற்றைத் தனித்துவத்தோடு பாதுகாக்க வேண்டும்.
மீண்டும் இந்த நாட்டை அழிக்க முயலும் மஹிந்தவுக்கு நாம் இடமளிக்க முடியாது.
மஹிந்த மீண்டும் நாட்டின் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களிடம் குரோதங்களை விதைத்து அதன் மூலம் ஆதரவைப் பெற்று ஆட்சியைக் கைப்பற் முயற்சி மேற்கொள்கின்றார்.
புதிய அரசியல் யாப்பிலே சிறப்பான ஏற்பாடுகள் மூலமாக இந்த நாட்டின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு ஒரே நாடு ஒரே இலங்கையர் நாம் என்ற அடிப்படையில் சகலரும் சகலதும் பெற்று வாழ ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.” என்றார்.
0 Comments:
Post a Comment