26 Jul 2017

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் புனரமைப்பு ஏற்பாட்டாளராக முபீன் நியமனம்.

SHARE
(ஏ.எச்.ஏ) 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட மத்திய குழுக்களைப் புனரமைப்பு செய்வதற்கான தீர்மானம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.


அத்தீர்மானத்தின்படி நாடு பூராவும் கிராம மட்டத்திலிருந்தே கட்சியை மீள் புனரமைப்பு செய்வது தொடர்பில் விஷேடமாக ஆராயப்பட்டது.
முதல் கட்டமாக மாவட்ட மத்திய குழுக்களை புனரமைத்து பின்னர் அதனைத் தொடர்ந்து கிராம மட்டத்தில் கட்சியைப் புனரமைத்தல் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேற்படி தீர்மானத்துக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியை புனரமைப்பதற்கான ஏற்பாட்டாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என். முபீன் நியமிக்கப்பட்டுள்ளார்.


SHARE

Author: verified_user

0 Comments: