8 Jun 2017

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடமையின்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்வதற்கான விஷே‪ட கூட்டம்.

SHARE
(ஏ.எச்.ஏ. ஹ{ஸைன்) 

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு உட்பட பல்வேறு வெளிக்கள கடமைகளின் போது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள், தடைகள் அச்சுறுத்தல்களை ஆராய்வதற்கான விஷே‪ட கூட்டம் சனிக்கிழமை 10.06.2017 மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சமூக மண்டபத்தில் பிற்பகல் 3 மணியிலிருந்து இடம்பெறும் என்று இலங்கைப் பொதுச் சுகாதாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை அறிவித்துள்ளது.


இது விடயமாக அக்கிளை மேலும் தெரிவிக்கையில், டெங்கு அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களில் ஒன்றான மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு உட்பட பல்வேறு சுகாதார களப் பணிகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தங்களை அர்ப்பணித்து ஈடுபட்டு வருகின்றார்கள்.

இது திருப்தியளிக்கக் கூடிய விடயமாக இருக்கின்ற அதேவேளை களப் பணிகளில் ஈடுபடும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பல்வேறு சிரமங்களையும், தடைகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு வருவதால் மிகுந்த அசொளகரியத்திற்குள்ளாவதாக சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்கள்.

குறிப்பாக உள்ளுராட்சி மன்ற நிருவாகம், பொது மக்கள், சமய நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள், வர்த்தக உணவு விடுதி நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்ட இன்னும் பல தரப்பாரிடமிருந்தும் நிறுவனங்கள் குழுக்களிடமிருந்தும் தங்களது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாகவும் தெரியப்படுத்தியுள்ளார்கள். எனவே, இந்த நிலைமைகள் குறித்து ஆராய்ந்து சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க மேற்படி விஷே‪ட கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

சூழலைச் சுத்தமாகப் பேணுவதில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மாத்திரம் தங்களை அர்ப்பணித்தால் போதாது, கூடவே பொதுமக்கள், அரச தனியார் நிறுவனங்கள், சமயஸ்தாபனங்கள் என அனைவரும் ஒட்டுமொத்த கூட்டுப் பொறுப்புடன் இயங்க வேண்டும்.”என்றும் மட்டக்களப்பு மாவட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 74 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மாவட்டத்தித்திலுள்ள 14 உள்ளுராட்சி மன்றப் பிரிவுகளிலும் வைத்தியசாலைகளிலும் கடமையாற்றி வருகின்றார்கள்.

SHARE

Author: verified_user

0 Comments: