2017 ஆண்டு கிழக்கு மாகாண தமிழ் மொழித்தினப் போட்டியில். எழுத்தாக்க போட்டி 4 ஆம் பிரிவில் சிறுகதை ஆக்கத்தில் மட்/பட்/பெரியபோரதீவு பாரதி வித்தியாலய மாணவி செல்வி.மனோகரன் ராஜினி கடந்த மாதம் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியில் இடம் பெற்ற மாவட்ட மட்ட போட்டியில் முதலிடம் பெற்று, பின்னர் மாகாண மட்டத்தில் நடைபெற்ற போட்டியிலும் பங்கு கொண்டு மாகாண மட்டத்திலும் முதலிடம் பெற்று தற்போது
தேசியமட்டத்திற்க்கு தெரிவாகியுள்ளார்.
இவரை நெறிப்படுத்திய அசிரியை திருமதி. திருக்கேதீஸ்வரன் சோதிமலர் மற்றும் அதிபர் க.இராஜகுமாரன் அவர்களும் இதன் மூலம் மாணவி பெரியபோரதீவு கிராமத்திற்கும் பாடசாலைக்கும் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.


0 Comments:
Post a Comment