6 Jun 2017

மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் - 2017

SHARE
மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்  எதிர்வரும் 2017.06.09 ஆம் திகதி ஆரம்பமாகி 2017.06.12 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது. 


9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்னிரவு கிராங்குளம் கிராம மக்களின் ஆதரவுடன் கதவு திறத்தல் பூஜையும், 10 ஆம் திகதி சனிக்கிழமை குருக்கள்மடம் கிராம மக்களின் ஆதரவுடன் பகற்சடங்கு பூஜையும், 10 ஆம் திகதி சனிக்கிழமை இரவு மாங்காடு கிராம மக்களின் ஆதரவுடன் சடங்கு பூஜையும், 11 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பகல் தேற்றாத்தீவு கிராம மக்களின் ஆதரவுடன் கல்யாணசடங்கு பூஜையும், 11 ஆம் திகதி  ஞாயிற்றுக் கிழமை இரவு செட்டிபாளையம் கிராம மக்களின் ஆதரவுடன் பூரண கும்பச் சடங்கும், 12 ஆம் திகதி திங்கட் கிழமை பகற்சடங்கும், அன்றயத்தினம் பின்னிரவு திருக்குளிர்த்திச் சடங்கும் களுதாவளைக் கிராம மக்களின் ஆதரவுடன் நடைபெறவுள்ளது. 

11 ஆம் திகதி  ஞாயிற்றுக் கிழமை இரவு நடைபெறவுள்ள பூரண கும்பச் சடங்குக்குரிய நெல் குடியிருப்பு கிராம மக்களினால் கொண்டுவரப்படும். சடங்கு காலங்களில் பாரம்பரிய முறைப்படி கண்ணகையம்மன் வழக்குரை படித்தல் இடம்பெறுவதோடு, 19 ஆம் திகதி திங்கட் கிழமை எட்டாம் சடங்கும் நடைபெறவுள்ளதாக செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய பரிபாலனசபை தெரிவித்துள்ளது.






SHARE

Author: verified_user

0 Comments: