பிரபஞ்சத்திலிருக்கும் இந்தப் பூமிப் பந்தை நாமெல்லோரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதனை மாசுபடுத்தும் உரிமை எவருக்கும் கிடையாது என இலங்கையில் தங்குதிறனுள்ள இயற்கை வளங்களுக்காகவும் உயிர்வாயுத் தொழிநுட்பத்திற்காகவும் பணியாற்றிவரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனதாக்ஸன் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ரங்க பல்லவல தெரிவித்தார்.
தென் ஆசியா காலநிலை செயற்பாட்டு வலையமைப்பினால் (ஊயுNளுயு ஊடiஅயவந யுஉவழைn நேவறழசம ளுழரவா யுளயைஇ ளுவயவநஅநவெ) திங்களன்று 05.06.20174 வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது@
“காலநிலை சம்பந்தமாக உலக ஒப்பந்தம் ஒன்றை அடைந்து கொள்வதற்காக பல ஆண்டுகளாக போராடி வந்த எமக்கு அமெரிக்க அதிபர் எடுத்திருக்கும் முடிவு ஒரு ஏமாற்றத்தையளிக்கும் செய்தியாக அமைந்து விட்டது.
அமெரிக்காவின் இந்த முடிவு தற்கொலை குண்டின் ஊசியை வெளியே இழுத்து குண்டை வெடிக்கச் செய்வது போன்றிருக்கின்றது.
இந்தப் புவியை யாரும் மாசுபடுத்த உரிமை உடையவர் அல்லர், அத்துடன் அவ்வாறு மாசுபடுத்தினால் அதற்குரிய விலையை இந்தப் பூமிப்பந்தில் வாழ்வோர் கொடுத்தாக வேண்டிவரும்.
ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிய போதிலும் கூட ஒரு பிரகாசமான பக்கம்; நன்றாக உள்ளது. நல்ல முயற்சிகள் ஒருபோதும் முடியப் போவதில்லை.
பெரும்பாலான பிராந்திய அரசாங்கங்கள், நகரங்கள் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திற்கு ஆதரவாக இணங்கி நடக்கும் பக்கத்தில் இன்னும் இருக்கிறார்கள்.
இலட்சியத்தை நோக்கிய காலநிலை நடவடிக்கைகளை அர்ப்பணிப்புக் கொண்டு செயலாற்றி வரும் அமெரிக்காவில் உள்ள அப்படிப்பட்ட அர்ப்பணிப்பாளர்களை நாம் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.
காலநிலை நீதியை வேண்டிய யதார்த்தத்துடன் நாம் தொடர்ந்து போராடுவோம்.
ஆனால், இது ஒரு புதிய காலநிலை நடவடிக்கை சகாப்தத்தின் ஒரு தொடக்கப் புள்ளியேயன்றி உலகின் முடிவல்ல.” என்று தெரிவித்துள்ளார்.
பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து ஜனாதிபதி டிரம்ப்பின் வெளியேற்றம் என்பது குறுகிய நோக்குடைய சுயநல மற்றும் முட்டாள்தனமானதாக உள்ளது என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த முட்டாள்தனமான முடிவு மில்லியன் கணக்கான மக்களின் பொருளாதாரம், வாழ்வு என்பனவற்றை ஆபத்திற்கு இட்டுச் செல்லக் கூடியது என்று நிரூபித்துள்ளது.
பாரிஸில் 2015 ல், 196 நாடுகள் பருவநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமடைதல் என்பது பற்றிய ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டன.
பருவநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமடைதல் என்பது தொழிற்சாலைகள், விவசாயம் ஆகிய நடவடிக்கைகளால் வாயுக்கள் அல்லது வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளிவிடப்படுவதால் ஏற்படும் மோசமான பாதிப்புகளைக் குறிக்கிறது.
இந்த வாயு உமிழ்வு ஏற்படுத்துவதாகச் சொல்லப்படும் உலகம் வெப்பமடைவதில் காணப்படும் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில்தான் பாரிஸ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதில் கலந்து கொண்ட நாடுகள் புவி வெப்ப நிலையை, தொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு நிலவிய 2 செண்டி கிரேட்டுக்கும் கீழ் வைத்திருப்பது. முடிந்தால் அதற்கும் குறைவாக, அதாவது 1.5 செண்டிகிரேட்டுக்கு கொண்டுவருவது.
மனித நடவடிக்கைகளால் வெளியிடப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அளவை, மரங்கள், மண் மற்றும் கடல்கள் இயற்கையாக உறிஞ்சிக் கொள்ளக்கூடிய அளவுக்கு மட்டுப்படுத்துவது ஆகியவற்றைச் செய்ய ஒப்புக்கொண்டன.
இதிலிருந்துதான் தற்போது அமெரிக்கா தன்னிச்சையாக விலகியுள்ளது. என்று அந்த அறி;கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment