7 Jun 2017

களுவாஞ்சிகுடியில் குருக்கள் ஒருவரின் வீடு உடைக்கப்பட்டு நகையும்,பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

SHARE
களுவாஞ்சிகுடி சுப்பிரமணியம் குருக்கள் வீதியில் அமைத்துள்ள வீட்டிலையே மேற்படி கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது.

புதன்கிழமை மாலை (07) இடம்பெற்ற இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது.

களுவாஞ்சிகுடி கண்ணகியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் முன்னிட்டு வீட்டில் உள்ள அனைவரும் ஆலயத்திற்கு சென்ற வேளையிலையே   குறித்த கொள்ளையை கொள்ளையர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஆலய பூசையின் நிமிர்த்தம் கண்ணகியம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்த நாங்கள் பூசை முடிந்ததும் வீட்டிற்கு வந்த வேளை வீடு உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்து உடன் பொலிசாருக்கு அறிவித்தோம். வீட்டின் பின்கதவினை உடைத்து சுவாமி அறையினுள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த அலுமாரியை உடைத்து அதற்குள் இருந்த 75000 ரூபாய் பணமும், 12 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளர்  தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: