13 Jun 2017

நெடுஞ்சேனையில் குடிசையிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

SHARE
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் நெடுஞ்சேனை கிராமத்திலுள்ள குடிசை ஒன்றிலிருந்து திங்கட்கிழமை 12.06.2017 பகல் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நெடுஞ்சேனையைச் சேர்ந்த 06 பிள்ளைகளின் தந்தையான காளிக்குட்டி பொன்னுத்துரை (வயது 68) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தானும் கணவரும் ஒன்றாக  வசித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மனைவி அருகிலுள்ள மகளின் வீட்டுக்கு சென்று மீண்டும் வீடு திரும்புகையில் கணவன் உயிர் பிரிந்து சடலமாகக் காணப்பட்டதாக மனைவி தெரிவித்துள்ளார்.

சடலம் உடற் கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: