தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் 7 திட்டங்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக போரதீவுப்பற்றுப் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கே.சுந்தரலிங்கம் திங்கட் கிழமை (12) தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 10.5 இலெட்சம் ரூபாய நிதியும் அப்பகுதிவாழ் பொதுமக்களின் 50 இலெட்சம் ரூபாய் நிதியுடன் சேர்த்து 4 மைதானங்கள் புணரமைத்தல், ஒரு சிறுவர் பூங்கா அமைத்தல், ஒரு பொதுக்கட்டடம் நிருமாணித்தல், அன்னதான மண்டபம் ஒன்று அமைத்தல் போன்ற செயற்றிட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர், அப்பிரதேச இளைஞர் யுவதிகள் மற்றும், பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்று வரும் இச்செயற்றிட்டங்கள் அனைத்தும் எதிர்வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment