வரலாற்றுச் சிறப்பு மிக்க துறை நீலாவணை கண்ணகியம்மன் ஆலய திருச்சடங்கு நிகழ்வின் இறுதிநாள வட்டுக் குற்றுச் சடங்கு திங்கட் கிழமை (12) மாலை மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
கடந்த செவ்வாய் கிழமை (06) தகவு திறத்தலுடன் ஆரம்பமான இவ்வாலய திருச்சடங்கு செவ்வாய் கிழமை (13) அதிகாலை திருக்குளிர்தியுடன் நிறை பெற்றது.
இதன் சிறப்பம்சமான பக்தர்கள் மடிப்பிச்சை எடுத்துவரும் நெல்லை உரலிலே இட்டு குற்றி (வட்டுக்குற்றுதல்) அதிலிருந்து பெறப்படும் அரிசியைக் கொண்டு அம்மனுக்கு பொங்கல் பொங்கி பூஜை வழிபாடுகளில் ஈடுபடும் நிகழ்வானது சிறப்பம்சம் வாய்ந்ததாகக் கொள்ளப்படுகின்றது.



0 Comments:
Post a Comment