எங்களது கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார். என காணாமல்போன உறவுகளின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி செவ்வாய்க்கிழமை (13) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகள் 13 பேர் வடக்கு மாகாண ஆளுனர் அறுவலகத்தில் திங்கட் கிழமை (12) பிற்பகல் 4 மணியளவில் சந்தித்துக் கலந்துரையாடினோம் சுமார் 45 நிமிடங்கள் எங்களுடன் உரையாடிய ஜனாதிபதி அவர்கள் எங்களுக்கு சிறந்த தீர்வு பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
காணாமலாக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிட வேண்டும்.
இரகசிய முகாம்கள் மற்றும் தடுப்பு முகாம்களை நாங்கள் நேரடியாகச் சென்று பார்வையிடுவதற்குச் அனுமதி வழங்க வேண்டும்.
சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். போன்ற கோரிக்கைகளை நாம் ஜனாதிபதியிடம் முன் வைத்துள்ளோம்.
நீங்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை என்னால் நிறைவேற்றித்தரப்படும். செவ்வாய்க்கிழமை (13) முப்படைத் தளபதிகளுடன் கூட்டம் ஒன்று உள்ளது, இதன்போது காணாமலாக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு நான் உத்தரவிடுகின்றேன். வெகுவிரைவில் இப்பெயர் பட்டியலை வெளிவரும். ஏதாவது முகாம்களில் காணாமலாக்கப்பட்டவர்கள் யாராவது இருக்கின்றார்கள் என உறுதிப்படுத்தினால் எனக்கு அறிவிக்கவும், உடன் அவற்றைப் பார்வையிடுவதற்குரிய சந்தர்ப்பத்தை நானே ஏற்படுத்தித் தருவேன். சுமார் 45 நிமிடங்கள் ஜனாதிபதி எங்களுடன் உரையாடினாலும் இச்சந்தர்ப்பத்தில் அதிகளவு கதைப்பதற்கு நேரம் போதாது. ஆனால் எம்மால் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்ட மகஜரை அவர் வாசித்து அறிந்த பின்னர் எமக்கு இவ்வாறு ஜனாதிபதி பதிலை வழங்கினார் என அமலநாயகி மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment