18 May 2017

“பெண்ணியமும்” கண்ணியமும் கவிதை நூல் வெளியீட்டு விழா

SHARE
மார்க்க அறிஞரும், கவிஞரும் தத்துவவாதியும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான கலாபூஷணம் எம்.எச். அப்துல் ஹலீம் எழுதிய“பெண்ணியம்” கண்ணியம் கவிதை நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (19.05.2017) மாலை 4 மணிக்கு ஏறாவூர் வாவிக்கரை பூங்கா கலாசார மண்டபத்தில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் ஏ.பி.எம். அஷ்ரப்,   கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறைப் பேராசிரியர் எஸ். யோகராசா, கல்விப் பணிப்பாளர் இஷற்.ஏ. நஸீரா உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்தோரும் இன்னும் பிரதேச அரசியல்வாதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.  

நூலாசிரியர் இந்த பெண்ணியம் எனும் தனது கவிதை நூலில் பெண்களை மகிமைப்படுத்தும் மனிதம் விதைத்தவர்கள், சொத்தில்லாப் பெண், தாய்மை எனும் பெரும் பதவி, ஆணாதிக்கம் உள்ளிட்ட 37 தலைப்புக்களில் “பெண்ணியத்தின் கண்ணீர்த் துளிகள்” என்ற தலைப்பில் இவர் கவிதைகளை யாத்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: