களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோவிற்போரதீவு பிரதான வீதியில் வியாழக்கிழமை (18) இடம் பெற்ற வாகனவிபத்தில் தலத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தார்.
மேலும் இவ் விபத்து சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது
பாலம் நிர்மாணிப்புக்காக இரும்பு ஏற்றிச்சென்ற நீள்லொறியை மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் முந்த எத்தணித்தன் காரணத்தினால், லோறியின் பின் சக்கரத்தில்(ரயரில்) அகப்பட்டதனாலையே குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வெல்லாவெளியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையிலையே குறித் விபத்தில் சிக்கியுள்ளனர். மோட்டார் சைகிளை ஓட்டிச்சென்றவரின் தலைப்பகுதி லொறிச் சக்கரத்திற்குள் அகப்பட்டு நசிபட்டதனாலையே சம்பவ இடத்தில் உயிரிழந்தாகவும் பின்னால் இருந்து பயணித்தவர் தெய்வாதினமாக காயங்களுடன் உயிர் தம்பபியுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற பெரியபோரதீவு பட்டாபுரத்தினைச் சேர்ந்த பிள்ளையான்பிள்ளை கிருஸ்ணராசா வயசு 51 என்பவரே உயிரிழந்தவர் ஆவார் மேலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெருமாள் புண்ணியமூர்த்தி வயசு 43 என்பவரே காயமடைந்தவர் ஆவார் காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.








0 Comments:
Post a Comment