சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தமிழா இணையத்தள வானொலி நடாத்திய அறிவுக் களஞ்சிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று (06.05.2017) சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வு சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதில் நவாஸ் என்ஜினீயர் பவுண்டேசன் தலைவரும் பொறியிலாளர் எம்.எஸ்.எம்.நவாஸ், சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் திருமதி ஹூசைமா பாரிஸ், தமிழா இணையத்தள வானொலியின் முகாமைத்துவ பணிப்பாளர்களான எம்.எஸ்.ஜலீஸ், எம்.பிரதாப், பாடசலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







0 Comments:
Post a Comment