சுவீடன் அரசு பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண்களை முன்னேற்றம் காணச் செய்வதில் அதிக ஆதரவாக உள்ளது சுவீடன் நாட்டின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் அன்னா உக்லா
சுவீடன் அரசு பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண்களை முன்னேற்றம் காணச் செய்வதில் அதிக ஆதரவாக உள்ளது என சுவீடன் நாட்டின் இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியாவுக்கான அரசியல் விவகாரங்களுக்கான கவுன்ஸிலர் அன்னா உக்லா (Anna Uggla Counsellor Political Affairs
for India Srilanka and Maldives) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தவும், அவர்களது வியாபார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் மாபெரும் கண்காட்சியும், விற்பனையும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான வீ எபெக்ட் (றுந நுககநஉவ) நிறுவனத்தின் அனுசரணையுடன் வியாழக்கிழமை 25.05.2017 மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டப வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேற்படி கண்காட்சித் திறப்பு நிகழ்வில் கவுன்ஸிலர் அன்னா உக்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது@
ஒன்பதாவது வருடமாக இடம்பெற்று வரும் இத்தகைய பெண்களை ஊக்குவிக்கும் சந்தைக் கண்காட்சியும் மற்றும் விற்பனையில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.
சுவீடன் சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் ஊடாக இலங்கையின் அபிவிருத்திக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் திட்டங்கள் வெற்றியளித்திருக்கின்றன என்பதையே இத்தகைய பெண்களின் உற்பத்திகள் விற்பனையும் கண்காட்சியும் வெளிப்படுத்தி நிற்கின்றன.
பெண்களை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அத்தனை கருமங்களிலும் நாம் கைகோர்த்து ஆதரவுக் கரம் நீட்டியிருக்கின்றோம்.
அதனடிப்படையில் இந்த மாதிரியான வாழ்வாதார தொழில் முயற்சி ஊக்குவிப்பு மற்றும் சந்தை வாய்ப்புத் திட்டங்கள் சமூகத்தில் பாதிக்கப்பட்டுப் போயிருக்கின்ற பெண்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் பொருளாதார ரீதியில் வலுப்படுத்த பெருந்துணை புரியும் என்பது எமது நம்பிக்கை.
வறுமை ஒழிப்பிலும் அபிவிருத்தியிலும் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
அந்த வகையில் இந்த வகையான திட்டங்கள் மிகுந்த பயனளிக்கும் என்பது எமது அரசின் நம்பிக்கை.
பாப்புக்குள்ளான இலங்கைப் பெண்களை முன்னேற்றுவதில் நாம் இலங்கை அரசின் பெண்களுக்கான வலுப்படுத்தல் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கின்றோம்.
இனிமேலும் பெண்களை வவூட்டுவதிலும் இன்ன பிற அபிவிருத்தித் திட்டங்களிலும் நாம் தொடர்ந்து ஆதரவளிப்போம்.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், வீ எபெக்ட் நிறுவனத்தின் இலங்கை திட்ட இணைப்பாளர் ரீ. மயூரன், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் திட்ட இணைப்பாளர் ஆர். சிவப்பிரகாசம், மண்முனை வடக்கு பிரதேச யெலாளர் கே. குணநாதன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதிய திட்ட இணைப்பாளர் கே. பிருந்தன், இன்னும் பல அதிகாரிகளும் பயனாளிகளான பெண் உற்பத்தி முயற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
கணவனை இழந்த கைம்பெண்களின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சந்தை வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும் தமது உற்பத்தினை மேலும் வினைத்திறன் மிக்கதாக கொண்டு செல்லும் வகையிலும் இந்த கண்காட்சி தொடர்ச்சியாக வருடந்தோறும் ஒழுங்கு செய்யப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment