28 May 2017

அபிவிருத்தித்திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித்திட்டங்கள் வியாழக்கிழமை (25) மக்களிடம் கையளிக்கப்பட்டன.
பின்தங்கியதும், தனித்துவிடப்பட்டதுமான கிராமங்களை அபிவிருத்தி செய்யும் எனும் கிழக்கு மாகாணசபையின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பரிந்துரைக்கமைவாக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட காக்காச்சுவட்டைக் கிராமத்தில் 8.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 5 கொண்கிறீட் வீதிகளும், பொதுக் கட்டடம் ஒன்றும் இதன்போது மக்களிடம் கையளிக்கப்பட்டன.

கிழக்குமாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெத்தினம், மற்றும், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டு மக்களிடம் அபிவிருத்தித்திட்டங்களைக் கையளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.














SHARE

Author: verified_user

0 Comments: