களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவத்து பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.சீ.ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வினை களுதாவளை மாகா வித்தியாலய அதிபார் பே.கார்ப்தீபன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பத்து பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் இவ் விழிப்பூட்டல் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மஞ்சள் கடவையில் வைத்தே கூடுதலான விபத்துக்கள் இடம் பெறுகின்றதாக அறிய முடிகின்றது. இதில் மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதற்காவே தற்போது இவ் விழப்புணர்வு நிகழ்வு நடாத்தப்படுகின்றது. என போக்கு வரத்து பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.சீ.ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்போது சரியான விதிமுறைக்கு அமைவாக மஞ்சள் கடவையில் கடப்பது சம்பந்தமாக பொலிசாரினால் விளக்கமளிக்கப்பட்டதுடன், செய்பாட்டு ரீதியாகவும் நிகழ்த்தி காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது அத்துடன் பாடசாலைகளில் மாணவர்கள் போக்குவரத்து கடமையில் ஈடுபடுவதற்காக ஆங்கிகளும் பொலிசாரினால் வழங்கப்பட்டது

0 Comments:
Post a Comment