களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் ஒரு கடை உட்பட ஆலயத்தின் உண்டியலும் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள சில்லறைக் கடை ஒன்றும் அக் கடைக்கு அண்மையில் அமைந்துள்ள விஷ்ணு ஆலயத்தின் உண்டியலுமே உடைத்து கொள்ளையிடப்பட்டதாக தெரியவருகின்றது.
சனிக்கிழமை (27) இரவு இடம்பெற்ற இக் கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
சனிக்கிழமை இரவு பக்கத்தில் அமைந்துள்ள எனது வீட்டில் நித்திரை செய்தேன். அதிகாலை கடை திறப்பதற்காக வந்தவேளை எனது கடை உடைக்கப்பட்டுள்ளதை பாரத்தேன், உடன் பொலிசாருக்கு அறிவித்தேன். எனது கடையில் இருபதாயிரம் ரூபாய் பெறுமதிக்கு மேலான கையடக்க தொலைபேசி அட்டைகளும் கல்லாப்பெட்டியில் விட்டுச் சென்ற சில்லறை பணமும் இதன் போது கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் சில பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்தார்.
இந்நிலையில்
இக்கடைக்கு அருகில் அமைந்துள்ள ஆலயத்தின் பொருட்களை பாதுக்கும் அறை உடைக்கப்பட்டுள்ளதாகவும், உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளன. இரண்டு கொள்ளை சம்பவங்களையும் ஒரே நபர்கள்தான் மேற்கொண்டிருக்க வேண்டும் என பொலிசார் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்






0 Comments:
Post a Comment