பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட இம்முறை புலமைபரிசில் பரீட்சை எழுதவிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 மாணவர்களுக்கான விசேட கற்றல் பயிற்சிகளை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்விசேட கற்றல் பயிற்சிக்காக தயாரிக்கப்பட்ட “கற்றல் திறனும் உள்ளார்ந்த ஆற்றல்களும்” எனும் பயிற்சி புத்தகதினை உத்தியோக பூர்வமாக அதிபர்களின் மத்தியில் வெளியீட்டு வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (27) பட்டிருப்பு கல்வி வலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இராசமாணிக்கம் சாணக்கியன், பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம், கோட்டக்கல்வி பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பரீட்சை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இம்மாணவர்களுக்காக பயிற்சி புத்தகத்தினை, வலயத்தின் ஆரம்பக் கல்விக்கு பொறுப்பான பிரதிகல்விப் பணிப்பாளர் வரதராஐன் தலைமையிலான வலயத்தின் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் ஒன்று கூடி இதனை தயாரித்திருந்தனர்.
300 மாணவர்களுக்கும் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டு பயிற்சி வகுப்புக்கள் கட்டம் கட்டமாக நடைபெற இருப்பதாகவும், இதற்காக சுமார் நான்கு இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment