ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை நண்பகல் 18.05.2017 தீ ஏற்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆசியர்களுக்கான கருத்தரங்கு இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அப்பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மின் விசிறியை அழுத்திய பொழுது திடீரென தீ பற்றிக் கொண்டதாகவும் அது பாரிய சேதங்கள் ஏற்படாத வகையில் உடனடியாக அணைக்கப்பட்டு விட்டதாகவும் மட்டக்களப்பு கல்வி வலயம், ஏறாவூர்ப் பற்று கோட்டம் 1 இன் கல்விப் பணிப்பாளர் எம். பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
இச்சம்பவத்தினால் ஆசிரியர்களுக்கோ மாணவர்களுக்கோ எதுவித காயங்களும் ஏற்படாத போதிலும் கட்டிடத்திற்கும் மின்சார உபகரணங்களுக்கும் மின் கம்பிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தலைமையிலான குழுவியர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையினரும் உடனடியாக பொலிஸாரினால் அங்கு வரவழைக்கப்பட்டனர்
0 Comments:
Post a Comment