30 May 2017

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் மருதமுனை கிளை வெளியீட்டுள்ள புனித ரமழானில் கவனிக்கப்படவேண்டிய ஒழுங்குமுறைகள்

SHARE
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை ஜம்இய்யதுல் உலமா, பள்ளிவாசல்கள் பிரதிநிதிகள் ஒன்றுகூடி புனித ரமழானில் கவனிக்கப்படவேண்டிய ஒழுங்குமுறைகள் சம்பந்தமாக பொதுமக்களுக்கு  பின்வரும் முக்கிய விடயங்களை
அறிவிப்புச் செய்துள்ளது.

01. பர்ளான நோன்பை றமழானில் கட்டாயம் நோற்க ஆர்வமூட்டும் பயான்கள், குத்பாக்களையும்  ஊக்குத்து பொதுமக்கள் நோன்பு நோற்க வழிகாட்டுதல்.

02. நோன்பை மாசுபடுத்தும் அனைத்துப் பாவமான காரியங்களிலிருந்தும் தவிர்ந்திருக்க அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் பயான்கள், குத்பாக்களை ஏற்பாடு செய்து பொதுமக்களை நெறிப்படுத்துதல்.

03. “றமழான் அல்-குர்ஆனின் மாதம்” என்ற வகையில் அதனை அதிகம் ஓதி, முழுமைப்படுத்தும் முயற்சிகளை தனியாகவும், கூட்டாகவும் மேற்கொள்ளல். 
(ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸ், தப்ஸீர் வகுப்புகளை ஏற்பாடு செய்தல்)

04. ஸகாதுல் பித்ரை மஸ்ஜிதுகளின் மஹல்லாக்கள் மூலம் வசூலித்து கூட்டு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தல்.

05. கடமையான ஸகாத் வசூல் முயற்சிகளுக்கு மருதமுனை ஸகாத் நிதியத்திற்கு ஒத்துழைப்பு நல்குதல்.

06. தனிப்பட்ட, கூட்டு இப்தார் வைபவங்களை வீண் விரயம் ஏற்படாத வகையில் மஸ்ஜிதுகளும், கழகங்களும், அமைப்புக்களும் மேற்கொள்ளல்.

07. நோன்பு காலங்களில் பகல் வேளைகளில் உணவகங்கள், சிற்றூண்டிச் சாலைகள் அஸ்ர் தொழுகை வரை மூடிவிடல் அல்லது திரையிட்டுக் கொள்ளல் மூலம் முஸ்லிம் அல்லாதவர்களும் நோன்பின் மாண்பை உணரச் செய்ய மஸ்ஜிதுகள் மூலம் மேற்பார்வை செய்தல்.

08. இரவு நேர வணக்க வழிபாடுகளை உதாசீனம் செய்யும் வகையில் ஆண்களும், பெண்களும் கடைத்தெருக்களில் அலைந்து திரிவதையும், இளைஞர்கள் பஸாரில் புதுனம் பார்த்து ஒழுக்கமில்லாமல் நடந்து கொள்வதையும் கட்டுப்படுத்தும் ஒரு பொறிமுறையை வகுத்தல்.

09. வீடுகளில் இபாதத் செய்யும் பெண்கள் மற்றும் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் மஸ்ஜிதுகளில் ஒலிபெருக்கிகளின் சப்தத்தை மட்டுப்படுத்தல்.

10. றமழானில் பிந்திய பத்தில் “இஃதிகாபை” ஊக்குவித்து “லைலத்துல் கத்ர்” பாக்கியத்தை அடையும் வகையில் 21, 23, 25, 27, 29 ஆகிய இரவுகளில் ஒவ்வொரு மஸ்ஜிதிலும் சுழற்சி முறையில் ஏற்பாடுகளைச் செய்தல்.

தற்போது நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் செயற்பாடுகள் தொடர்வதால் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலுக்கிணங்க ரமழான் முழுவதும் ஐந்து வேளைகளிலும் குனூத்துன் நாஸிலாவை ஓதி வருவது எனவும் மேற்படி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

இவ்வண்ணம்,
மருதமுனை ஜம்இய்யதுல் உலமா,  அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம்.
SHARE

Author: verified_user

0 Comments: