28 May 2017

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழையமாணவ சங்கத்தினால் தென்னிலங்கையில் பாதிப்பட்ட மக்களுக்கு நிவாரணம் சேகரிப்பு

SHARE
நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தில்(வெள்ளத்தினால்) சிக்குண்டு பாதிப்பட்ட மக்களுக்கும்,மாணவர்களுக்கும்,பிள்ளைகளுக்கும்
மனிதபிமான நோக்கில் உதவிக்கரம் நீட்டுவதற்கு மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியின் பழையமாணவர்களிடமிருந்தும்,பெற்றோர்களிடமிருந்தும் நிவாரணப்பொருட்களை வழங்கிவைக்குமாறு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவசங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

நிவாரணப்பொருட்களை ஞாயிற்றுக்கிழமை (28.5.2017) முதல்  அவசரமாகவும்  வழங்கி வைக்குமாறு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவசங்கத்தலைவர் எஸ்.சசிகரன் பெற்றோர்களையும்,பழைய மாணவர்களையும்,நண்பர்களையும் கேட்டுக்கொண்டார்.

இது சம்பந்தமாக பழைய மாணவசங்கத்தினால்  சனிக்கிழமை (27) அவசரமாக கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.இதன்போது மட்டக்களப்பு நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் சேகரிப்பது தொடர்பாக முன்மொழியப்பட்டது.இதன்போது மட்டக்களப்பில் ஐந்து இடங்களில் சேகரிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி,வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள அகரம் பதிப்பகம்,தாமரக்கேணி இலங்கை மின்சாரசபை அலுவலகம்,மற்றும் களுவாஞ்சிகுடி, செங்கலடி போன்ற இடங்களில் நிவாரப்பொருட்களை கொண்டு வழங்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நிவாரணப்பொருட்களை மனிதநேயத்துடன் வழங்குவபர்கள் மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழையமாணவ சங்கத்தலைவர்,செயலாளர்,பிரதி செயலாளர் போன்றோர்களுடன் தொடர்புகொண்டு உரிய இடங்களில் ஒப்படைக்கலாம்.

தலைவர் எஸ்.சசிகரன்(0776034979),செயலாளர் உமாமகேஸ்வரன்-மயூரன் (0712075080),பிரதிச்செயலாளர் என்.திருவருட்செல்வன்(0777355768)ஆகியோர்களை தொடர்புகொள்ளலாம்.


SHARE

Author: verified_user

0 Comments: