இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைக்கிளையின் பொதுச்சபைக் கூட்டமும் எதிர்வரும் 4 ஆண்டுகளுக்கான தேர்தலும் சனிக்கிழமை (27) மென்ரேசா வீதியில் அமைந்துள்ள அச்சங்கத்தின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது மாவட்டத்தில் இயங்குகின்ற 5 பிரிவுகளைச் சேர்ந்த செஞ்சிலுவைச் சங்க அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கிளைத் தலைவரின் அங்குரார்ப்பண உரை, சென்ற ஈராண்டு பொதுச் சபை அறிக்கையை ஏற்றுக் கொள்ளல், 2015 ஆம் 2016 ஆம் ஆண்டுகளுக்கான கிளைச் செயலாளர் அறிக்கை மற்றும் கிளைக் குழு அறிக்கை, கணக்கறிக்கை, போன்றன சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2017 ஆம் அண்டுக்கான வரவு செலவு பிரேரணைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
பின்னர் தலைவர், செயலாளர், பொருளாளர், உபதலைவர் ஆகிய 4 பதவிகளுக்கும் முன்பு அதே பதிவிகளை வகித்தோர், எதுவித போடிட்டிகளுமின்றித் தெரிவு செய்யப்பட்டனர். அந்த வகையில் தலைவராக மீண்டும் ஓய்வு பெற்ற பாடசாலை ஆசிரியரும், பிரபல சமூக சேவையாளருமான, முதலுதவி மற்றும் அனர்த்த முகாமைத்துவ போதனாசிரியருமான, த.வசந்தராசாவும், செயலாளராக பாடசாலை அதிபரும், சமூக செயற்பாட்டாளருமான சா.மதிசுதனும், பொருளாளராக ஊடகவியாலளரும், சமூக சேவையாளருமான வ.சக்திவேல் அவர்களும் உபதலைவராக சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்த்தரும் சமூக சேவையாளருமான எம்.எஸ்.எம்.அப்தூல்லாவும், தெரிவு செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து 6 செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காகவேண்டி 9 பேர் விண்ணப்பித்திருந்தனர். பின்னர் 6 செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்றது. இதன்போது அபிருத்தி உத்தியோகஸ்தரான கா.இராசரெத்தினம், ஆசிரியரான க.நவநாதன், சமாதான நீதவான் தெ.சிவபாதம், ஆசிரியர் ம.கலாவதி, முதலுதவிப் பயிற்றுவிப்பாளர் ச.கணேசலிங்கம், மற்றும் ஜெ.நிசாந்தினி ஆகியோர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.
0 Comments:
Post a Comment