17 May 2017

2200 மின்லியன் ரூபா நிதி மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூர்த்தி வங்கிகளில் தேங்கிக்கிடக்கின்றன – பிரதியமைச்சர் அமீரலி.

SHARE

2200 மின்லியன் ரூபா நிதி மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூர்த்தி வங்கிகளில் தேங்கிக்கிடக்கின்றன – பிரதியமைச்சர் அமீரலி.


போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள சமூர்தி வங்கிகளிலே 12 கேடி ரூபாவுக்கு மேலான நிதி தேங்கிக் கிடக்கின்றன. இதுபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தேக்கி வைத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 2200 மின்லியன் ரூபாக்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூர்த்தி வங்கிகளில் இந்தப் பணம் தேங்கிக் கிடக்கின்றன. 

என கிராமிய கொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க் கிழமை (16) வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. அப்பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின இறுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மேற்படி பிரதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

வாழ்வாதாரத்திற்கும், இன்னோரன்ன விடையங்களுக்கும். இம்மாவட்டத்தின் அபிவிருத்திகளுக்கும், உதவக்கூடிய இப்பணத்தை அரச அதிகாரிகள் வழங்காமல் வைத்திருப்பதென்பது கவலைக்குரிய விடையமாகும். இவ்விடையம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஒரு இறுக்கமான முடிவை எடுக்க இருக்கின்றோம். 

மட்டக்களப்பு மாவட்டத்திலே அதிகமாக மீள் குடியேற்ற வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து கணிசமான பணத்தை மீள அனுப்பியிருக்கின்றார்கள். இவ்வாறு அபிவிருத்திக்கு வந்த பணத்தை மீள திருப்பி அனுப்பும் செயற்பாடுகளை எதிர் வரும் காலங்களில் மேற்கொள்ளக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவுகளை அதிகாரிகளுக்கு நாங்கள் வழங்கியிருக்கின்றோம். அதற்குரிய பொறிமுறைகளையும். வழிகாட்டல்களையும் மேற்கொண்டுள்ளோம்.

வீடமைப்பு அமைச்சு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஆகிய அமைச்சுக்களினூடாக அதிகளவு வீடமைப்பு வசதிகளை மேற்கொண்டு வருவதோடு மேலும் இப்பிரதேசத்திற்கு கட்டம் கட்டமாக வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: