மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க் கிழமை (16) வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசானர் இ.பிரசன்னா, கிழக்கு மாகணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெத்தினம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கிராமிய உட்கட்டமைப்பு நிகழ்ச்சித்திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செயலவுத்திட்டம், மீள்குடியேற்ற அமைச்சின் வேலை;திட்டம், வீடமைப்பு, நிவிநெகும நிகழ்ச்சித்திட்டம், இதர அமைச்சின் வேலைத்திட்டங்கள், உள்ளிட்ட பல விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
போரதீவுப்பற்றில் மின்சார வினியோகம் 99 வீதம் பூர்தியாக்கப்பட்டுள்ளன, வன ஜீவராசிகள் திணைக்களத்தின் காரியாலயம் அமைப்பதற்கு
பேச் காணியும், அவ்வமைச்சின் யாட் அமைப்பதற்கு அரை ஏக்கர் காணியும் வழங்க இடம் ஒதுக்கிக் கொடுத்தல், போக்குவரத்து வசதிகளற்றிருக்கும் களுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு இம்மாதத்திற்குள் அரச பேரூந்து போக்குவரத்து சேவையை ஆரம்பித்தல், திக்கோடையில் அரச வங்கிக் கிளை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தல், மண்டூர் பாலமுனையிலிருக்கும் பொலிஸ் நிலையத்தை இம்மாத்ததிற்குள் வெல்லாவெளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ் நிலையத்திற்கு மாற்றுதல், உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 Comments:
Post a Comment