எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் 2009 முதல் ஆண்டு தோறும் ஈழத்திலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்துத் தழிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம், தமிழியல் விருது வழங்கி வருகின்றது.
இவ்வாண்டு (2017) 9 வது தடைவையாக, இவ்விருதினை வழங்குவதற்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் செயல்வடிவம் கொண்டுள்ளது. அந்த வகையில்
உயர் தமிழியல் விருது
இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மிகச் சிறந்த மூத்த படைப்பாளி
ஒருவருக்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது வழங்கப்படவுள்ளது.
தமிழியல் விருது.
தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த 3 ஈழத்து மூத்த படைப்பாளிகளுக்கு வவுனியூர் ஸ்ரீராமகிருஸ்ணா - கமலநாயகி தமிழியல் விருதுடன் தலா ரூபா 15,000 பணமும் வழங்கப்படவுள்ளது.
தமிழ்ப்பணியாளர் தமிழியல் விருது.
ஈழத்துப் படைப்பாளி அல்லாத அயல்நாட்டு தமிழ்ப்பணியாளர் ஒருவருக்கு கல்விமான் வ.கனகசிங்கம் தமிழியல் விருதுடன் ரூபா 25,000 பணமும் வழங்கப்படவுள்ளது.
இனநல்லுறவு தமிழியல் விருது.
இன நல்லுறவுக்காக உழைத்த சிங்களமொழிப் படைப்பாளர் ஒருவருக்கு தமிழியல் விருதுடன் ரூபா 10,000 பணமும் வழங்கப்படவுள்ளது.
சிறந்த நூல்களுக்கான தமிழியல் விருது.
2015ம், 2016ம் ஆண்டுகளில் வெளிவந்த 25 சிறந்த நூல்களுக்கு,
ரூபா 10,000 பணமும் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் தமிழியல் விருது
ரூபா 10,000 பணமும் அருட்கலைவாரிதி சு.சண்முகவடிவேல் தமிழியல் விருது
ரூபா 10,000 பணமும் நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருது
ரூபா 10,000 பணமும் கலைஞர் ஓ.கே கணபதிபிள்ளை தமிழியல் விருது
ரூபா 10,000 பணமும் பம்பைமடு நாகலிங்கம் - நல்லம்மா தமிழியல் விருது
ரூபா 10,000 பணமும் பதிவாளர்நாயகம் எஸ்.முத்துக்குமாரன் தமிழியல் விருது
ரூபா 10,000 பணமும் வித்தியாகீர்த்தி ந.சந்திரகுமார் தமிழியல் விருது
ரூபா 10,000 பணமும் தகவம் வ.இராசையா தமிழியல் விருது
ரூபா 10,000 பணமும் பம்பைமடு கந்தையா- இரஞ்சிதமலர் தமிழியல் விருது
ரூபா 10,000 பணமும் வைத்தியாச்சாரி மீராசாஹிபு அஹமது தமிழியல் விருது
ரூபா 10,000 பணமும் திருமலை லூர்து அருளாந்தம் தமிழியல் விருது
ரூபா 10,000 பணமும் கலைமாமணி மா.சிதம்பரப்பிள்ளைப்புலவர் தமிழியல் விருதும் வழங்கப்படவுள்ளன.
ஓவியருக்கான தமிழியல் விருது.
மிகச் சிறந்த ஓவியர் ஒருவருக்கு ஓவியர் கிக்கோ தமிழியல் விருதுடன் ரூபா 10,000 பணமும் வழங்கப்படவுள்ளன.
விருது விதிகள்
உயர் தமிழியல் விருது, தமிழியல் விருது, தமிழ்ப்பணியாளர் தமிழியல் விருது, இனநல்லுறவு தமிழியல் விருது ஆகியவற்றிக்கு பரிந்துரைகள் இல்லை. எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய மதிப்பீட்டுக்குழு தீர்மானிக்கும்.
சிறந்த நூல்களுக்கான தமிழியல் விருதுக்காக நூல்களும் பரிந்துரைக்
கடிதமும் அனுப்பப்படல் வேண்டும்.
நாவல், சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம்,
விடலை இலக்கியம், நாடகம், அறிவியல், ஆய்வியல், வரலாறு, பழந்தமிழ்
இலக்கியம், மொழி பெயர்ப்பு, தொழில் நுட்பம் எனப் பல்துறை சார்ந்த
நூல்களை தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம்.
நூல்களின் 3 படிகள் அனுப்பப் பெறுதல் வேண்டும்.
நூல்கள் 2015 ஜனவரி 1 முதல் 2016 டிசம்பர் 31 காலப்பகுதியில் பிரசுரிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
2015 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்கள் வேறாகவும் 2016ம் ஆண்டு வெளிவந்த
நூல்கள் வேறாகவும் மதிப்பீடு செய்யப்பட்டு தனித்தனியாக விருதுகள்
வழங்கப்படும்.
முதல் பதிப்பு மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.
நூல்கள் வந்து சேரவேண்டிய கடைசிநாள் : 15.07.2017
ஒரு படைப்பாளி, எத்தனைவகையான படைப்புக்களையும் அனுப்பி வைக்கலாம்.
நூலின் பெயர்,நூலாசிரியரின் பெயர்,முகவரி,நூலாசிரியரின் ஒரு புகைப்படம்,
தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி ஆகியவை அடங்கிய பரிந்துரைக்
கடிதம் இணைத்து அனுப்புதல் வேண்டும்.
துறைசார் அறிஞர்களை கொண்ட மதிப்பீட்டுக் குழு விருதுக்குரிய நூல்களையும்,
விருதாளிகளையும் தேர்வு செய்யும்.
பணமும் விருதும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் நிபந்தனைகளுக்கு அமைய வழங்கப்படும்.
நூல்களைஅனுப்ப வேண்டிய முகவரி :
டாக்டர் ஓ.கே.குணநாதன் மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மட்டக்களப்பு இலங்கை வளாகம் ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர்சோலை, 1 ஏ, பயனியர் வீதி, மட்டக்களப்பு, இலங்கை.

0 Comments:
Post a Comment