மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பின்தங்கிய அதி கஸ்ட்டப் பகுதியிலுள்ள 39 ஆம் கிராம அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, மற்றும் கச்சக்கொடிச் சுவாமிமலை பாடசாலை ஆகிய இரண்டு பாடசாலைகளில் கல்வி பயிலும் 118 மாணவர்களுக்கு இலவசமாக பாதணிகள் வெள்ளிக்கிழமை (12) போரதீவுப்பற்று பிரதேச சிவில் அமைப்பின் வேண்டுகோளிற்கிணங்க மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் வாசம் உதவும் உறவுகள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டன.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியில் இம்மாணவர்களுக்கு இச்சப்பாத்துக்கள் வழங்கி வைக்கப்பட்டன. புலம் பெயர்ந்து வெளி நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதியுதவியினால் வாசம் உதவும் உறவுகள் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமின்றி வடக்கு கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கிய ரீதியில் கல்வி வளர்ச்சியில் பிந்தங்கிக் காணப்படும் பகுதிகளையும், வாழ்வாதார விருத்தி செய்து வருகின்றது.
39 ஆம் கிராம அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் த.திருவருட்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சிவில் அமைப்பின் தலைவரும், வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் அப்பிரதேச இணைப்பாளருமான வ.சக்திவேல், கோட்டக்கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன், வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.விஜய், அவ்வமைப்பின் ஆலோசகர் த.வசந்தராசா, உள்ளிட்ட அதிபர், ஆசிரியர்கயள், பெற்றோர்கள், மாணவர்கள் எனபலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment