30 Apr 2017

இந்த நாட்டுச் சொந்தக் காரர்களான தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழாவிட்டால் நாடு சின்னாபின்னப்பட்டுவிடும். ஜனாதிபதி அறைகூவல்

SHARE
இந்த நாட்டுச் சொந்தக் காரர்களான தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழாவிட்டால் நாடு சின்னாபின்னப்பட்டுவிடும். என ஜ னாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதங்கம் வெளியிட்டார்.


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஓட்டமாவடி மத்திய கல்லூரியின்(தேசியப்பாடசாலை) யின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வியியல் மற்றும் வர்த்தகக் கண்காட்சி நிகழ்வுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வுகள் ஏப்ரில் 29ஆம் திகதி ஆரம்பித்து மே 02ஆம் திகதி நிறைவடையவுள்ளன.

மருத்துவ, பொறியியல், விவசாய, உற்பத்தத் தொழிற்துறை சார்ந்த கண்காட்சிகளுடன், மும்படையினரின் திறனாய்வு நிகழ்வுகளும் முக்கியம் இடம்வகித்துள்ளன.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, யுத்த அழிவுகளுக்குள்ளாகியிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் வடக்கு மாகாணம் கல்வியில் தனித்துவமான முன்னேற்றத்தை நோக்கி நகர்கின்ற அதேவேளை கிழக்கு மாகாணம் கல்வியில் பின்னடைவைக் கண்டுள்ளது அதிருப்தியைக் கொடுத்துள்ளது. 

கிழக்கு மாகாணக் கல்வி வீழ்ச்சி தொடர்பில் அரசும், மாகாண அரசும் மத்திய அரசிலுள்ள கல்வி  அமைச்சும் இணைந்து கிழக்கு மாகாணக் கல்விப் பின்னடைவுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை மேல்மட்டத்திற்குக் கொண்டு வர வேண்டும் எனும் திட்டத்தை நாங்கள் வகுக்கவுள்ளோம்.
நமது நாட்டை சிறப்பாக உருவாக்க வேண்டுமாயின் அந்த நாட்டிலுள்ள மாணவர் சமுதாயத்தை சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும்.
சமூகம் சிறக்க வேண்டுமானால் கல்வி சிறந்தோங்க வேண்டும்.
கல்வியில் முன்னேற்றமடைந்து கொடி கட்டிப் பற்ப்பதை விட அவர்கள் முழ நிறைவான வாழ்க்கையில் வெற்றிக் கம்பத்தைத் தொட வேண்டும்.
போதைப் பொருளற்ற நாடாக இந்த நாட்டை விடுவிப்பதுடன் மாணவர் சமுதாயத்தையும் முழுமையாக போதைப் பொருள் பக்கம் தலைகாட்டாது பாரத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பொறுப்பு ஆசிரியர்கள், அதிபர்கள், அதிகாரிகள், பொலிஸாருக்கு மட்டும் உரியதல்ல. பெற்றோர் மாணவர்களுடன் எந்நேரமும் கூடவே இருக்கும் ஒட்டு மொத்த சமூகமும் பொறுப்பெடுக்க வேண்டும்.

சாராயம், கஞ்சா, கசிப்பு, குடு இப்படி பல்வேறுபட்ட போதைப் பொருட்கள் தாராளமாக வலம்வருகின்றன. இவை எல்லாமே நோயை உண்டாக்கி, வறுமையை அதிகரித்து, அபிவிருத்தியை முடங்கச் செய்து மக்களையும் சமூகத்தையும் சீரழிப்பவைதான்.

நாட்டை அபிவிருத்தி செய்வதாயின் நாட்டில் இனங்களுக்கிடையில் சமாதானம் நிலவ வேண்டும்.

சிலர் வேண்டுமென்றே பிரச்சினையை உருவாக்குகின்றார்கள்,
திடீரென்று பௌத்த விஹாரையை நிறுவுவதால் அல்லது புத்தர் சிலையை வைத்து விடுவதால் பிரச்சினை கிளம்பி விடுகின்றது.
சில இடங்கிளிலே பள்ளிவாசலை வைத்துக் கொண்டும். இன்னும் சில இடங்களில் இந்துக் கோயிலை வைத்துக் கொண்டும் பிரச்சினையை உருவாக்குகின்றார்கள்.

ஆயினும், இந்த மதங்களைக் கடைப்பிடிப்பவர்கள் மனிதர்கள் எல்லோரும் மனிதர்களாகத்தான் இருக்கின்ற அதேவேளை பௌத்தம், இந்து இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய எந்த மதங்களை எடுத்துக் கொண்டாலும் அந்த மதங்கள் எவையும் பிரச்சினைகளை உருவாக்கி சீரழிந்து போக மக்களுக்குப் போதனை செய்யவில்லை.

இதனை மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டுச் சொந்தக் காரர்களான தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழாவிட்டால் நாடு சின்னாபின்னப்பட்டுவிடும்.

SHARE

Author: verified_user

0 Comments: