மட்டக்களப்பு களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் 59 வது ஆண்டு நிறைவையும், சித்திரைப் புத்தாண்டினையும் முன்னிட்டு கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து உள்ளுர் மன்றங்கள், பொதுமக்களின் ஆதரவுடன் நடாத்தும் கலாசார விளையாட்டு விழா சனிக்கிழமை (29) மட்.களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது.
கெனடி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் கணபதிப்பிள்ளை கணேசபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை சிறப்பு அதிதியாகவும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் கணக்காளர் இ.கார்த்திகேசு, ஓய்வு பெற்ற இலங்கை வங்கி பிராந்திய முகாமையாளர் இரா.நல்லையா, ஊடகவியலாளர் வ.சக்திவேல் உள்ளிட்டோர் அழைப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்ணடனர்.
இதன்போது தலையணைச்சமர், வழுக்குமரம் ஏறுதல், அப்பிள் சாப்பிடுதல், மர்ம மனிதனைக் கண்டுபிடித்தல், ஆண்களுக்கான கயிறுழுத்தல், மித வேக சைக்கிள் ஓட்டம், விநேத உடைப்போட்டி, பொலித்தின் பையில் பொருட்களை இடுதல், உள்ளிட்ட பல விளையாட்டுக்கள இடம்பெற்றன.
இதனக்போது வெற்றியீட்டிய வீர வீராங்கணைகளுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் வளங்கப்பட்டதோடு கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர் வையிரமுத்து மயில்வாகனம் மற்றும், ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் ஆகியோர் பொன்னாட போரத்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment