முன்பு இருந்த அரசாங்கத்தின் காலத்தில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது என்னை பல தடலைகள் அமைச்சர் பதவி தருகின்றோம் என அழைந்தார்கள், பல கோடிக்கணக்கான நிதிகளை எனக்கு அன்பழிப்பாகத் தருவதற்கு முயன்றார்கள் 7 தடவைகள் என்னிடம் பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார்கள். ஆனால் அமைச்சுப் பதவிகளுக்கோ, அல்லது அற்ப சலுகைகளுக்கோ ஆசைப்பட்டு நாங்கள் சோரம் போகவில்லை.
என தமிழ் தேவசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் 59 வது ஆண்டு நிறைவையும், சித்திரைப் புத்தாண்டினையும் முன்னிட்டு கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து உள்ளுர் மன்றங்கள், பொதுமக்களின் ஆதரவுடன் நடாத்தும் கலாசார விளையாட்டு விழா சனிக்கிழமை (29) மட்.களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் கழகத் தலைவர் கணபதிப்பிள்ளை கணேசபிள்ளையின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
மட்டக்களப்பு களுதாவளையில் அமையவிருக்கின்ற பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் அரசியல் செல்வாக்கு இருக்கக் கூடாது. இப்பொருளாதார மத்திய நிலையம் மாவட்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் நிருமாணிக்கலாம் ஆனால் அதற்கு பின்னணியாக அரசியல் சாயம் பூசப்படபக்கூடாது. ஏனெனில் இப்பnhருளாதார மத்திய நிலையத்தை சிலர் தாம் கொண்டு வந்ததாக தெரிவிக்கின்றனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இப்பகுதியிலுள்ள எமது மக்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராக வாக்களித்ததினால் எமது இனம் சாராத ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்கள். களுதாவளையில் அமைந்துள்ள திருஞான சம்மந்தர் குருகுலத்திற்கு கடந்த காலத்தில் நாங்கள் பல உதவிகளைச் செய்துள்ளோம் ஆனால் நான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் 7 வருடத்திற்குள் என்னை அக்குருகுல நிருவாகம் எந்த நிகழ்விற்கும் அழைக்கவில்லை. களுதாவளைக் கிராமம் பூர்வீகமான தமிழ் கிராமம் இக்கிராமம் ஒற்றுமையான கிராமம் ஆனால் அந்த ஒற்றுமை தம்மிழ் தேசியத்தில் தடம் பத்திக்க வேண்டும்.
அனவரும் தமிழ் தேசியத்தின் பால் அணிதிரழ வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் களுதாவளை மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தால் 4 நாடாளுமன்ற ஆசனத்தைப் பெற்றிருக்க முடிந்திருக்கும். மாறாக இக்கிராம மக்கள் மாற்றுக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்ததினால்; அமீரலி அவர்களை, சகோதர நாடாளுமன்ற உறுப்பினராக உருவாக்கப்பட்டிருக்கின்றார். இது தமிழினத்திற்கு எவ்வளவு வேதனையான விடையமாகும் என்பதை இக்கிராம மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இனிமேலாவது தமிழ் தேசியத்திற்கு இக்கிராம மக்கள் வாக்களிக்க வேண்டும். நீங்கள் எமக்கு வாக்களித்தாலும் வாக்களிக்கவிட்டாலும் எமது சேவைகள் உங்கள் பக்கம் இருக்கும்.
எனவே களுதாவளைக் கிராமத்தின் ஒற்றுமையை தமிழ் தேசியத்தின்பால் தடம் பதிப்பீர்களேயானால் உங்களை யாரும் அசைக்க முடியாது. களுதாவளையில் அமையவிருக்கின்ற பொருளாதார மத்திய நிலையத்தை ஐக்கிய தேசியக் சட்சி கொண்டு வந்ததாகவும் பிரதியமைச்சர் அமீரலி கொண்டு வந்ததாகவும் சிலர் கருத்துக்களைத் தெரிவித்துத் திரிகின்றார்கள். இவ்வாறான கருத்துக்களுக்கு நாம் இடமளிக்கமாட்டடோம். இங்கு பொருளாதார மத்திய நிலையம் அமைவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு இல்லை ஆனால் ஏனைய கட்சிகள் அதற்குள் குளிர்காயமுடியாது.
மக்களுக்காகவே நாங்கள் செயற்படுகின்றோம் அபிவிருத்திகளை மேற்கொள்ளத்தான் வேண்டும் மாறாக அபிவிருத்திகளை அரசாங்கத்திடம் கேட்டால் எங்களுடன் வந்து இணைந்து கொள்ளுங்கள் என கேட்கின்றார்கள். முன்பு இருந்த அரசாங்கத்தின் காலத்தில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது என்னை பல தடவைகள் அமைச்சர் பதவி தருகின்றோம் என அழைந்தார்கள், பல கோடிக்கணக்கான நிதிகளை எனக்கு அன்பழிப்பாகத் தருவதற்கு முயன்றார்கள், 7 தடவைகள் என்னிடம் பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார்கள். ஆனால் அமைச்சுப் பதவிகளுக்கோ, அல்லது அற்ப சலுகைகளுக்கோ ஆசைப்பட்டு நாங்கள் சோரம் போகவில்லை.
இந்த மண்ணில் அபிவிருத்திக்கோ, சலுகைகளை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவோ எமது மக்கள் உயிர்களைத் தியாகம் செய்யவில்லை. எமது தமிழினம் சொந்த மண்ணில் சகல உரிமைகளையும் பெற்று வாழ் வேண்டும் என்பதற்காகத்தான் தியாகங்களைச் செய்திருக்கின்றார்கள். எமது உரிமைக்காக சலுகைகளை நிராகரிக்கின்றோம். எமது உரிமைகளைப் பெறும் வரையில் எமது போராட்டங்களை சாத்வீகத்தில் நடாத்துவோம்.
பாதிக்கப்பட்ட எமது சமூகத்திற்கு சில அபிவிருத்தி வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதற்காக தற்போதைய அரசாங்கத்திற்கு சில ஒத்துழைப்புக்களை நாம் வழங்குகின்றோம். ஏனெனில் நாங்கள் சாத்வீக ரீதியிலும், ஆயுத ரீதியிலும் தோல்வி கண்டோம் தற்போது இராஜதந்திர ரீதியில் முயற்சிகளை ஏற்படுத்தி வருகின்றோம். அதில் தோல்வி ஏற்படுத்தாத வகையில் எங்கள் திட்டங்களை செயற்படுத்த வேண்டிய கடமை இருக்கின்றது. இதனைத்தான் எமது தலைவர் இரா.சம்மந்தன் அவர்கள் முன்நெடுத்திருக்கின்றார்.
2 பொரும்பான்மைக் கட்சிகளும் ஒன்றாக இணைந்துள்ளதனால் அவர்களுடன் எமது அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றோம். அதற்காகவேடி திட்டமிட்டு செயற்படுகின்ற காணி சுவிகரிப்பு, போதை அதிகரிப்பு போன்ற விடையங்களுக்கு நாம் ஒருபோதும் துணைபோக மாட்டோம். அதனடிப்படையில் மட்டக்களப்பு கும்புறுமூலையில் அமைக்கப்பட்டு வருகின்ற எதனோல் உற்பத்தி நிலையத்தை தடுத்து நிறுத்துமாறு கோரி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட 3 பிரதிநிதிகள் தவிர்ந்த ஏனையவர்கள் கையொப்பமிட்டு ஓட்டமாவடி பாடசாலை நிகழ்வில் சனிக்கிழமை (29) கலந்து கொண்ட ஜனாதிபதியிடம் மகஜர் சமர்ப்பித்திருக்கின்றேன். ஏனெனில் இந்த மாவட்டத்தை போதையற்ற மாவட்டமாக உருவாக்க வேண்டும் அதற்காக அயராது உழைப்போம், மக்களுக்குத் துன்பம் விளைவிக்கின் எந்தச் செயற்பாட்டிலும் யார் வந்தாலும் அதற்கு இடமளிக்க மாட்டடோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment