30 Apr 2017

எம்மை அறியாமலே நாங்கள் எமது தமிழ் மொழியை நாளும் பொழுதும் சிதைத்துக் கொண்டு இருக்கின்றோம். என மட்டக்களப்பு மாவட்ட தமிழச் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி மு.கணேசராசா தெரிவித்தார்.

SHARE
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் எற்பாட்டில் கவிஞர் எருவில் மூர்த்தி ஞபகார்த்தமாக தமிழ் இலக்கிய கருத்தாடற் களம் எருவில் கண்ணகி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் சனிக்கிழமை (29) நடைபெற்றது. இதனை தலமை தங்கி நடாத்தி தலமையுரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
   
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதி என்பது ஒரு தனித்துவமான தமிழ் தொகுதியாகும் இந் தொகுதியில் வாழ்கின்றோம் என்பதில் மக்கள் பொருமை கொள்ளவேண்டும். அந்தபொருமையை காப்பாற்றுகின்றவரகளாக செயற்பட வேண்டும்.

நாம் தமிழர் என்பதற்காக வேறு மொழியை கற்ககூடாது என்பதற்கில்லை என்பதனை மாணவர்களுக்கு  கூறிவைக்க விரும்புகின்றேன். உலகில் எங்கு வாழ்த்தாலும், என்ன தொழில் செய்தாலும் எமது ஆதி மூலத்தினையும், எமது தோற்றுவாயினையும் எந்தவிதத்திலும் மறந்துவிடக்கூடாது. இவைகளுக்கு எந்தவித்திலும் கலங்கம் ஏற்படாதவாறும் சிதைவு ஏற்படாதவாறும்  நாங்கள் நடந்து கொள்ள வேண்டும்

தற்காலத்தில் சிலருக்கு தமிழ் மொழியுடன் வேற்று மொழியை கலந்து பேசுவது கௌரவத்தை கொடுப்பதாக நினைக்கின்றனர். எம்மை அறியாமலே எமது தமிழ் மொழியை நாங்கள் நாழும் பொழுதும் சிதைத்துக் கொண்டு இருக்கின்றோம். அன்பார்ந்த தமிழ் மக்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் கலப்பு மொழியை பேசக்கூடாது என்று சபதம் எடுக்க வேண்டும். அவ்வாறு சபதம் எடுத்து செய்பட்டால் தான் எதிர்காலத்தில் எமது தமிழ் மொழியை நாங்கள் தக்கவைத்துக் கொள்ளமுடியும்.

எமது தமிழ்ச்சங்கமானது தமிழருடைய அரிகிவருகின்ற கலை,கலாசார, பண்பாடுகள் அனைத்தையும் பாதுகாத்து அதனை தக்கவைத்து கொள்வதற்காக பலதரப்பட்ட செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். மட்டக்களப்பு மாவட்ட தமிழ்ச் சங்கமானது மட்டக்களப்புக்கு மாத்திரம் அல்ல மாவட்டம் சார்ந்த அனைத்து கிராமங்களுக்கும் சொந்தமானது. எனவே அச்சங்கத்தில் அனைவரும் இணைந்து கொண்டு எமது மாட்டத்தின் தமிழ் மொழியை பாதுகாக்க முன்வரவேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.











SHARE

Author: verified_user

0 Comments: