“ஆரோக்கியத்தின் ஊடாக உலகை வெல்வோம்” எனும் தொனிப் பொருளில் விளையாட்டுத்துறை அமைச்சு செயற்படுத்தும் விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வாரம் மட்டக்களப்பு ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் திங்களன்று 06.02.2017 ஆரம்பித்து வைக்கப்பட்டதாக தேசிய இளைஞர்
சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எம். ஹனீபா தெரிவித்தார்.
ஆறு கட்டங்களாக இடம்பெறும் இந்த விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வார நிகழ்வுகளில் முதல் தினமான திங்களன்று பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சகல தரங்களிலுமுள்ள அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் தேகாலோக்கியப் பயிற்சியளிக்கப்பட்டதாக விளையாட்டு உத்தியோகத்தரும் பயிற்சியாளருமான எம்.எம்.எம். ஜெலீல் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆறு தினங்களுக்கு இடம்பெறும் இந்த விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வார நிகழ்வுகளில் அலுவலர்கள், கற்பிணித் தாய்மார், சிறுவர்கள், முதியோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வூட்டப்படவுள்ளது.
இந்த ஆறு நிகழ்வுகளிலும் தினமும் போஷாக்கு நிறைந்த பாரம்பரிய காலை உணவு இலைகளில் வைத்து பரிமாறப்படுவது சிறப்பம்சமாகும்.
0 Comments:
Post a Comment