ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செங்கலடி, கணபதிநகர் கிராமத்திற்கு சுத்தமான குடிநீர் வழங்கும் மூன்றாண்டுத் திட்டத்தின் முதல் கட்டம் ஞாயிறன்று 05.02.2017 ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக பாம் பவுண்டேஷன் நிறுவன திட்ட முகாமையாளர்
அருளானந்தம் சக்தி தெரிவித்தார்.
யூஎஸ்எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் சுத்தமான குடிநீர் வழங்கும் இந்த மூன்றாட்டுத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமுலாக்கப்படுகின்றது.
செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சுத்தமான குடிநீர் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வில் யூஎஸ்எயிட், பாம் பவுண்டேஷன் ஆகிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் இலங்கைக்கான பிரதிநிதிகள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், சுகாதாரத் திணைக்களம், கல்வித் திணைக்கம் ஆகியவற்றின் அதிகாரிகளும் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் மற்றும் அதன் அலுவர்கள், மாணவர்கள், பொதுமக்கள், பயனாளிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதியில் சுமார் ஒரு இலட்சம் பேருக்கு சுத்தமான குடிநீரை வழங்கி அவர்களை சிறு நீரக நோயிலிருந்து காப்பதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியளித்து திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யூ.எஸ்.எயிட் நிறுவனம் அறிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வறட்சி, மற்றும் வெள்ளத்தினால் அடிக்கடி பாதிக்கப்படும் வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதிக்கு குடிநீரை வழங்கும் வகையில் ருளுயுஐனு அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் ஓரு விஸ்தரிப்பாகவே இந்த திட்டம் அமைந்துள்ளதாகவும் யூஎஸ்எயிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், மழைநீரை சேகரிப்பதற்கான தொட்டிகளை அமைத்தல், குழாய் மூலம் குடிநீரை பெறுவதற்கான வசதிகளை வழங்குதல், வெள்ளம் மற்றும் வறட்சியினால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்வதற்காக உள்ளுர் உட்கட்டமைப்புகளை சீர்திருத்தம் செய்தல் போன்ற திட்டங்களும் அடங்கியுள்ளன.
பேரழிவுடன் தொடர்புபட்ட நீர் மற்றும் சுகாதார தேவைகளுக்குமாக நிரந்தரமான தீர்வைக் காண்பதற்கு உள்ளுர் சமூகங்களிற்கு இந்தத் திட்டம் உதவும்.
இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதில் உள்ளுர் அமைப்பான லங்கா ரெயின்வோட்டர் ஹார்வெஸ்டிங் போரமும், கிழக்கில் பாம் பவுண்டேஷன் நிறுவனம் சமூகங்களிற்கு குழாய் நீர், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், மற்றும் உள்ளுர் பயிற்சிகளை வழங்கி வருகின்றன.
0 Comments:
Post a Comment