மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை மா
லை கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தப் புகையிரதம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படத் தயாராக புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக புகையிரத நிலைய அதிபர்கள் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்து கல் வீச்சுத் தாக்குதலை மேற்கொண்ட விஷமிகள் இருவர் உடனடியாகவே அங்கிருந்து தப்பித் தலைமறைவாகி விட்டதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கல் வீச்சுத் தாக்குதலினால் புகையிரத இயந்திரப் பகுதியிலுள்ள கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment